விதையும் விவசாயியும்!
நண்பர்களே!
நண்பர்களே!
நாங்கள் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றபோது அவருடைய புறக்கடையில் நட்டிருந்த புடலங்காய்க் கொடிப்படர்ந்து ஏராளமாகக் காய்பிடித்திருந்தது.
அதன்மேல் விருப்பப்பட்டு அவர்களிடமிருந்து அந்தக் காய்களைப் பழுக்கவிட்டு நிறைய விதைகள் எடுக்கச் சொல்லி வாங்கிவந்து எங்கள் தோட்டத்தில் நட்டோம்.
ஆனால் அவர்கள் வீட்டில் அவ்வளவு காய்கள் காயத்த செடியில் இருந்து எடுக்கப்பட்ட விதைகள் நாங்கள் நட்டபோது வெறும் செடிதான் புதர்போல வந்திருக்கிறது. காய் பிடிக்கவில்லை.
கடையில் வாங்கிவந்து நட்ட விதைகள் மூலம் வந்திருக்கும் செடிகள் காய்க்கின்றன .
காரணம் விவசாயிகளின் பாரம்பரிய விதைகள் மறைந்து வருவதும் விதை நிறுவனங்களின் தயாரிப்புகள் நடைமுறைக்கு வருவதுமே!
அவை நட்டால் ஒருமுறை மட்டுமே காய்க்கும். மீண்டும் நட்டால் காய்க்காது!
ஒவ்வொரு முறை நடும்போதும் கடைகளுக்குச் சென்று கம்பெனிகள் வெளிவிடும் விதைகளைத்தான் வாங்கிவந்து நடவேண்டும்!
இந்தப்போக்கு விவசாயிகளை அப்பட்டமாக பெரிய கம்பெனிகளுக்கும் அதைத் தொடர்ந்து அவை இருக்கின்ற பணக்கார நாடுகளுக்கும் நமது விவசாயிகளையும் கடைசியில் நாட்டையும் அடிமையாக்குவதில்தான் முடியும்!
No comments:
Post a Comment