கமலை ஓட்டும் முறை.
நமது முன்னோர்கள் இன்றுள்ளது போல் அறிவியல் சாதனங்கள் வளராத காலத்தில் நிலத்தடி நீரைப் பாசனம் செய்து விவசாயம் செய்வதற்கு கிணறுகளைத் தோண்டி அதன் நீரைக் கமலை என்று சொல்லப்படும் மாடுகளைக் கொண்டு நீர் இறைக்கும் முறையைப் பயன்படுத்தினார்கள்.
அது எப்படிச் செயல் பட்டது என்பதை இப்போதுள்ள இளம் தலைமுறையினர் யாரும் அறிய மாட்டார்கள்.
அதுபற்றிய விளக்கம்.......
இன்றுள்ளதுபோல் அக்காலத்தில் கிணறுகள் இவ்வளவு ஆழம் கிடையாது.
இருபது அடியில் இருந்து நாற்பது அடிகளுக்குள் இருக்கும். அதைவிட ஆழமாக இருந்தால் மாடுகளைக் கொண்டு போதுமான நீரை மேலே கொண்டுவர முடியாது.
அதனால் ஆழம் குறைவான கிணறுகளின் சுற்றுச் சுவரை ஒட்டி அமைக்கப்படும் துலை மூலம் மாடுகளைக் கொண்டு நீர் இறைத்தார்கள்.
கிணற்றின் துலை என்பது அடிப்பாகம் கிணற்றுக்குள் நீட்டியபடி இருக்கும் துளைகள் உள்ள இரண்டு நீளமான கல்பாறை விட்டங்களின்மேல் அமைக்கப்படும் அமைப்பு ஆகும்.
அது குத்துக் கால்கள், தோரணப் பலகை, காதுப் பலகை, கமலை வண்டி (பிரதான உருளை) உதைகால்கள், பண்ணைவாய் உருளை ஆகியவை கொண்ட வலுவான மரத்தாலான அமைப்பு ஆகும்.
அதில் சால், என்ற இரும்புத் தகரத்தால் ஆன சாதனத்தையும் தும்பி என்ற தோலால் ஆன நீளமான பை போன்ற சாதனத்தையும் கயிறுகளுடன் இணைத்துத் துலை வழியாக மாடுகளைக் கொண்டு தண்ணீர் இறைப்பார்கள்.
தகரத்தால் செய்யப்பட்ட மேல்பகுதி அகலமாகவும் கீழ்ப்பகுதி குறுகலாகவும் திறந்தபடி உள்ள உருண்டை வடிவப் பாகத்தைச் சால் என்பார்கள்.

அதன் மேல்பாகம் நான்கு பட்டையான இரும்புப் பட்டாக்களால் இணைக்கப்பட்டு உறிபோல் ஒரு இடத்தில் வளையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.
அதிலிருந்து மேல் நோக்கிப் பெரிய வடக் கயிறு துலையின் உச்சியில் மேல்நோக்கி அமைந்துள்ள பிரதான உருளை வழியாக மாடுகளின் கழுத்தில் பூட்டப்பட்டுள்ள நுகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.
சாலின் அடிப்பகுதியில் உள்ள குறுகலான திறந்தபாகம் நீளமான தோல்பையின் ஒரு பக்கத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் .
தும்பி என்று சொல்லப்படும் அதன் மறு முனையும் திறந்தும் மேல் நோக்கியும் இருக்கும்.
மேல் நோக்கிய அதன் நுனியில் தோல் பட்டையுடன் இணைக்கப்பட்ட வடத்தைவிட சற்று கனம் குறைந்த ஒரு வலிமையான வால் கயிறு மேல்நோக்கிச் சென்று கிணற்றின் விளிம்பும் பண்ணை வாய் என்று சொல்லப்படும் வாய்க்கால் துவங்கும் இடமும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள பண்ணை வாய் உருளை வழியாக மாடுகள் பூட்டப்பட்ட நுகத்தின் மையத்துக்குச் செல்லும்.
இப்போது மாடுகள் பின்னோக்கி நகர்ந்து துலையை நெருங்கும்போது தும்பியும் தோலும் கிணற்றினுள் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு இருக்கும்.
அப்போது கமலையோட்டும் நபர் வால் கயிற்றைப் பிடித்து கொஞ்சம் இழுத்தால் கிணற்றினுள் தண்ணீருக்குள் சால் மூழ்கி சாலும் தும்பியும் நீரால் நிரம்பி விடும் .
வால் கயிற்றை தளர்த்தினால் மீண்டும் சாலும் தும்பியும் சம நிலைக்கு வந்து விடும்.
அதனால் தண்ணீர் வெளியேறாமல் உள்ளேயே இருக்கும்.
மாடுகளை வடத்தின்மேல் அமர்ந்தவண்ணம் ஓட்டினால் மாடுகள் முன்னோக்கிச் செல்லும். அப்போது தண்ணீருடன் சாலும் தும்பியும் மேலே வேகமாக வரும்.
சால் துலையை நெருங்கும் போது தும்பி சற்றுக் கீழே இருக்கும் பண்ணை வாய்க்குள் இழுக்கப்படும் .
அப்போது சாலுக்கும் தும்பிக்கும் இருந்த சமநிலை மாற்றம் அடைவதால் அவற்றுக்குள் இருக்கும் தண்ணீர் தும்பியின் அடிப்பாகம் வழியாக வேகமாக பண்ணை வாய்க்குள் நுழைந்து வாய்க்கால் வழியாக நிலத்துக்குப் போகும்.
மீண்டும் மாடுகள் பின் நோக்கி நகரத் துவங்கினால் மீண்டும் தண்ணீரை அள்ளிவர சாலும் தும்பியும் கிணற்றுக்குள் போகும்.
இதுதான் கமலை ஓட்டுவது.
ஒரே கிணற்றில் இதுபோல் ஒன்றுக்கு மேற்பட்ட துலைகள் அமைத்து ஆட்களையும் மாடுகளையும் நிறைய வைத்துத் தண்ணீர் இறைத்து நிறைய நிலத்தில் விவசாயம் செய்வார்கள்.
இதுதான் அந்தக் காலத்தில் நமது முன்னோர்கள் கமலை எனும் முறையில் மாடுகளைக் கொண்டு கிணற்று நீரைப் பாசனம் செய்த முறை ஆகும்.
No comments:
Post a Comment