சர்க்கரை நோய் மட்டுமா?
நண்பர்களே!
சர்க்கரை நோயைப் பரம்பரை நோய் என்கிறார்கள்.
அதிலும் தனது ரத்த சொந்தங்களில் இன்னாருக்கு ஏற்கனவே இருந்தால் நமக்கு வரும் வாய்ப்பு இவ்வளவு சதவிகிதம் என்று பட்டியலும் சொல்கிறார்கள்!
ஆதாவது முன்னோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் கண்டிப்பாகப் பிள்ளைகளுக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கச் சொல்கிறார்கள்.
ஆனால் முன்னோருக்கு இல்லாமல் முதன்முதலாகவும் ஒருவருக்கு வருகிறது.
அதேபோல ஒருவருக்குப் பிள்ளைகள் பிறந்த பின்னால் சர்க்கரைநோய்க்கான காரணங்கள் முதன்முதலாகத் தோன்றினால் அது எப்படிப் பிள்ளைகளைப் பாதிக்கும்?...
தாங்கள் பிறந்தபின்னால் பெற்றோருக்குச் சர்க்கரை நோய்க்கான காரணங்கள் ஏற்பட்டிருந்தால் அது தங்களை மரபு வழியாகப் பாதிக்காது என்று மருத்துவர்கள் அறிவுருத்துவதாகத் தெரியவில்லை!
ஆகப் பெரியவர்களுக்கு சர்க்கரை என்றால் அது தங்களையும் பாதிக்கும் என்ற அச்சத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
இந்த இடத்தில் ஒன்றை யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
ஆதாவது சர்க்கரை நோய் முன்னோர்களுக்கு இல்லாமல் ஒருவருக்கு வருகிறது என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்.
அப்படியானால் முன்னோருக்கு சர்க்கரை நோய் இருந்தாலும் அடுத்து வரும் சந்ததிக்கு வராமல் போவதற்கான காரணங்கள் மட்டும் என் இருக்கக்கூடாது?
அதுதான் நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று ஆகும்.
நமது உடம்பின் கட்டமைப்பு இந்த பூமியில் நிலவும் பஞ்ச பூதங்களின் பல்வேறு அம்சங்களில் இருந்து உணவையும் நீரையும் காற்றையும் பெற்றுத் தோன்றி வளர்ந்து வாழ்ந்து மடியும் விதத்தில் அமைந்திருக்கிறது.
இந்த இயக்க முறையின் ஒரு அம்சம்தான் உடம்பு பல்வேறு முறைகளில் தனக்குத் தேவையான பல்வேறு சத்துக்களைப் பல்வேறு விகிதங்களில் பெற்று வாழ்கிறது.
அதைத்தான் உடல்வாழ்க்கை என்கிறோம்.
அத்தகைய சீரான உணவுமுறையும் சீரான வாழ்க்கை முறையும் பல காரணங்களால் சீர்குலையும்போது நோய் ஏற்படுகிறது. அதைத்தான் மிகினும் குறையினும் நோய் செய்யும் என்று வள்ளுவர் சொன்னார்!
அது சர்க்கரை நோய்க்கும் பொருந்தும்.
உடம்புக்கு எந்த அளவு சர்க்கரை தேவையோ அந்த அளவு மட்டுமே செரிமான உ\றுப்புக்களால் கொடுக்கப்படவேண்டும். ஆனால் அந்தச் செயல்பாட்டில் இடர் ஏற்படும்போது அது கூடுதலாக அல்லது குறைவாக ஆகிறது.
அதனால் ஏற்படும் நோயைக் குணப்படுத்தப் பல்வேறு மருத்துவ முறைகள் கையாளப்படுகின்றன.
பல்வேறு சிகிச்சைகளும் மருந்துகளும் எடுத்துக்கொள்ளப் படுகின்றன.
ஆனால் நோய் முற்றிலும் குணமாகும் என்று யாரும் உறுதி சொல்வது இல்லை.
அந்தநோயின் அடிப்படைக் குறையான இன்சுலின் சுரப்புக் குறைவை ஈடு செய்ய குறைபாட்டுக்குத் தக்க மருந்துகளை மாற்றி மாற்றிக் கொடுப்பதோடு மருத்துவர்களின் கடமையை முடித்துக்கொள்கிறார்கள்.
தாங்கமுடியாத கட்டத்தை எட்டியவுடன் அதற்கான வேறு காரணங்களைச் சொல்வதோடு உறுப்புக்களை வெட்டுவதும் முடியாது எனக் கையை விரிப்பதும் ஆண்டவன்மேல் பழிபோடுவதுமாகத் தங்கள் வேலையை முடித்துக்கொள்கிறார்கள்.
ஆனால் அனைவரும் நினைக்க மறந்த ஒன்று உள்ளது.
இன்சுலின் சுரப்பு ஏன் தடைப்பட்டது? அந்தத் தடை ஏற்பட்ட உறுப்பு பலவீனமடைந்ததற்கு என்ன காரணம்?
அந்த பலவீனம் ஏன் ஏற்பட்டதோ அந்தக் குறையைச் சரி செய்வதால் அதை ஏன் நல்ல நிலைக்கு உயர்த்த முடியாது?
இதைத்தான் நாம் நினைப்பதில்லை!
காரணம் மருத்துவர்களின் மண்டையில் உதிக்கும் தீர்வும் மக்களின் ஊறிப்போன நம்பிக்கைகளும் அந்த பாதிக்கப்பட்ட பகுதியின் தேவைக்கு மாறாகத்தான் இருக்கும்.
காரணம் அவர்களால் ஆங்கில மருந்துகளையும் நவீன முறையில் சமைக்கப்படும் உணவுகளையும் தவிர உடல் ஏற்றுக்கொள்ளும் அவசியமான பண்டங்கள் இருப்பதாக நினைக்க முடிவது இல்லை!
காரணம் அவர்களுக்கு அப்படிப் பழக்கமோ சிந்தனையோ அடிப்படை அறிவோ கிடையாது!...
ஆனால் சர்க்கரை நோய்க்கு மட்டுமல்ல வேறு பல நோய்களுக்கும் இப்போது வழக்கில் உள்ள மருந்துகளை உண்ணாமல் உணவின்மூலமே தீர்வு காண முடியும்.
ஆதாவது நமது நோய்களில் பெரும்பாலானவற்றுக்கு உணவுக் கோளாறும் உழைப்பின்மையே காரணம் ஆகும்.
ஆதாவது நமது உணவுப் பழக்கமும் உழைப்பின்மையும் பல நோய்களுக்கு இடம் கொடுக்கின்றன. காரணங்களாகவும் இருக்கின்றன.
அதன் பொருள் என்ன? உணவுப்பழக்கத்தை மாற்றி உடலுக்கும் வேலை கொடுத்தால் நோய்களுக்கு இடம் இல்லை என்பதுதானே?
நோய்கள் உருவாகக் காரணமாக இருந்தவற்றை மாற்றி அமைப்பதன் மூலமும் உடலுக்கு உழைப்பு விளையாட்டு, உடற்பயிற்சி, ஆகியவற்றின்மூலம் வேலை கொடுப்பதன்மூலமும் ஏன் கோளாறுகளைச் சரிப்படுத்தி, வந்தவழி திருப்பி அனுப்ப முடியாது?
அதுதான் ஒவ்வொருவரும் தமக்குத் தாமே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி!
அப்படி அனுப்பவேண்டுமென்றால் நாம் என்ன செய்யவேண்டும் என்பதுதான் முக்கியமான கேள்வி..
ஆதாவது என்னென்ன உணவுகள் நாம் உண்ட தவறான உணவுகள் என்பதை அறிய வேண்டும். அதனால் உடம்புக்கு நேர்ந்த தீங்கை உணர வேண்டும், அதன்பின் அத்தகைய உணவுப் பழக்கங்களை ஒழிப்பதன்மூலம் உடலில் பல்வேறு முறைகளில் சேர்ந்த கழிவுகளை சுத்தப்படுத்த வேண்டும். காரணம் அந்தக் கழிவுகள்தான் நோய்களுக்கு அடிப்படைக் காரணம்.
அதன்பின் அந்த இடத்துக்கு கழிவுகள் அசுத்தங்கள் இல்லாத நல்ல உணவுகள் மூலம் புத்துயிர் ஊட்டவேண்டும்.
அந்த நிலையில் தவறான உணவுகளால் செயற்பாடு குலைந்த உறுப்புக்கள் தங்களின் குறைபாட்டை சரிசெய்துகொண்டு புத்துணர்ச்சியுடன் இயங்கத் தொடங்கும்.
அதன் தொடர்ச்சியாக எந்தெந்த உறுப்புக்கள் பாதிப்படைந்ததால் என்னென்ன நோய்கள் உருவாயினவோ அவையெல்லாம் ஒழித்துக் கட்டப்படும்.
அப்படியானால் உடலில் நோய்கள் உருவாவதற்கான உணவுகள் எவை?
எந்தெந்த உணவுகளை சமைத்து உண்கிறோமோ அந்தந்த உணவுகள் எல்லாமே சமைக்கும் முறைக்கு ஏற்ப உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்றன.
தீங்கு விளைவிக்கும் உணவுகள் உண்ணும் நல்ல உணவுகளின் சக்திக்கு மீறியதாக இருந்தால் உடல்நலம் ஏதாவது ஒருவகையிலோ பல வகையிலோ பாதிக்கப்படும்.
நல்ல உணவுகளே உண்ணாமல் முழுக்கவும் தவறான உணவுகளை உண்பவர்களுக்கு உடல்நலக் கோளாறுகள் அதிகமான அளவு ஏற்படும். காரணம் அந்த அளவு அவயங்கள் பாதிக்கப்படும்.
அதைச் சரி செய்வதற்கான ஒரே வழி தீங்கை உருவாக்கிய தவறான உணவுகளை நிறுத்திவிட்டு நன்மை செய்யும் இயற்கை உணவுகளை உண்ணத் துவங்குவதே!
இயற்கை உணவு என்பது மனிதன் தோன்றிய நாளில் இருந்தே உண்ணப்பட்டு வரும் மனிதனுக்கு ஏற்ற உணவாகும்.
காரணம் அது மனிதன் உருவானதற்கே காரணமாக இருந்த உணவுகளாகும்.
மனிதன் நெருப்பின் பயனைக் கண்டறியும்வரை உண்டு வந்த சிதைக்கப்படாத - வேதிப் பண்புகள் ஏற்றப்படாத - இயற்கை உணவாகும்.
அது முதலில் வேண்டாத கழிவுகளாக மாறி உடலில் தங்குவது இல்லை!
தவிர தவறான உணவுகளால் உடலில் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றுகிறது.
அதைத் தொடர்ந்து முன்னர் ஏற்பட்ட உடல் கோளாறுகளையும் சரி செய்கிறது.
காரணம் அதன் இயற்கையான பண்பு அத்தகையது!
அதன்காரனமாகத் தவறான உணவுகளால் சீர்குலைந்து தமது வேலைகளைச் சரியாகச் செய்ய இயலாமல்போன உடல் உறுப்புக்கள் தங்களைப் புதுப்பித்துக்கொண்டு மீண்டும் தங்கள் பணிகளை முழுமையாகச் செய்யும் தகுதியைப் பெறுவது தவிர்க்க முடியாதது ஆகிறது.
அப்புறம் என்ன? நல்லதுதானே?
அதை நாம் உணர்ந்தோம் எனில் நமது முன்னோர்களுக்கு நோய் இருந்திருந்தாலும் அந்த மரபு வழிக் கோளாறுகளை நம் காலத்தில் சரி செய்து நமக்கு அடுத்த தலைமுறைக்கு அதைக் கடத்தாமல் நல்ல மரபை உடற்கூறுகளில் உருவாக்க முடியும் என்று ஆகிறது!
எனது சொந்த அனுபவமும் அதுவே!
எனது பெற்ற தாயாருக்கு இருபத்தி ஐந்து வருடங்கள் சர்க்கரை நோய் இருந்து சமீபத்தில் காலமானார்கள்.
அவருக்கு எப்போது சர்க்கரை நோய் என்று தெரிய வந்ததோ அது வருங்காலத்தில் என்னையும் பாதிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதை உணர்ந்தேன்.
காரணம் நான் பிறக்கும் முன்பே அவருக்குச் சர்க்கரைநோய் வருவதற்கான கூறுகள் உருவாகி இருந்தால் அது என்னையும் நிச்சயம் பாதிக்கும் அல்லவா?
அதனால் நான் எச்சரிக்கை அடைந்தேன்.
அவருக்கு சர்க்கரை நோய் துவங்கிய காலம் நான் இயற்கை உணவில் தஞ்சம் அடைந்த காலமாக இருந்தது!
அதன் காரணமாக நான் இயற்கைஉணவின் பங்கை அதிகரித்தேன்.
சமைக்கும் உணவிலும் தீங்கு அதிகம் இல்லாத சமையல் உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன்.
அதன்காரணமாக எனது உடல்நலத்தைப் பராமரிக்கும் பொறுப்பு சமையல் உணவில் இருந்து இயற்கை உணவுக்குக் கை மாறியது.
இன்று நான் உண்ணும் உணவில் இயற்கை உணவுதான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது.
அதன் தொடர்ச்சியாக எனக்கு அறுபத்தி இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில் சர்க்கரை நோய் மட்டுமல்ல எந்த நோயின் அறிகுறியும் இல்லாமல் வாழ்கிறேன்.
இளைஞனைப்போல் மண்ணில் உழைக்க முடிகிறது.
காரரணம் இயற்கை உணவும் உழைப்பு அல்லது உடல்பயிற்சியுமே!
அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை அதிகமாக உள்ள உணவுப் பொருட்களையும் உண்டபின் சர்க்ரையாக அதிக அளவு மாற்றப்படக் கூடிய உணவுப் பொருட்களையும் உணவில் தவிர்க்க வேண்டும்.
இயற்கையான காய் கறிகளுக்கும் மூலிகைச் சத்துக்கள் நிறைந்த கீரைகளுக்கும் முளைக் கட்டிய தானியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உண்ணவேண்டும்.
அதன் காரணமாக அவர்களின் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் வருவதோடு, அதற்குக் காரணமாக இருந்த உடல் பாகங்கள் தங்கள் பணியைச் செய்யத் துவங்கி போதுமான அளவு இன்சுலினைச் சுரக்கும் தன்மையைப் பெற்றுவிடும்.
அதன் பின்னால் இனிப்புச் சுவை உள்ள பழங்கள் உட்பட அனைத்து உணவுகளையும் உண்ணும் முழுமையான சக்தியைப் பெறலாம்.
ஆனால் அதை சமைப்பதன்மூலம் கெடுக்கப்பட்ட உணவுகளை முன்போலவே வரைமுறை இன்றி உண்ண அனுமதிக்கப்பட்ட அனுமதியாக எடுத்துக்கொள்ளக் கூடாது! இயற்கை உணவின் மேலாதிக்கத்தைக் கை விட்டால் மீண்டும் பலவிதக் கோளாறுகள் வந்தே தீரும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல மனிதனை பாதிக்கும் எந்த நோயின் பிடியில் சிக்கியவர்களும் இதிலிருந்து விடுதலை பெறலாம் என்பதே நாம் உணரவேண்டிய முக்கியமான ஒன்றாகும்!
தந்தைக்கு சர்க்கரை குறைபாடு இருந்தால் 40%, தாய்க்கு இருந்தால் 70%, இருவருக்கும் இருந்தால் 90% - தொடரும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது... ஆனால் எல்லா குழந்தைகளுக்கும் வருவதில்லை என்பதும் உண்மை... எந்த வயதாக இருந்தாலும், உடல் உழைப்பு குறைவாகும் போது சர்க்கரை குறைபாடு வருகிறது... இது எனது அனுபவத்தில்...!
ReplyDeleteஉங்கள் அனுபவம் ஒரு பாடம்... நன்றி ஐயா...
நன்றி நண்பரே!
Deleteபெற்றோர்களுக்கு சர்க்கரை குறைபாடு இருந்தால் பிள்ளைகளுக்கும் வரும் என்று ஆங்கில மருத்துவம் கூறுகிறது. சில குழந்தைகள் பிறக்கும்போதே சர்க்கரை குறைபாடு உள்ளது. சில குழந்தைகள் பிறந்து பல வருடங்கள் கழித்து சர்க்கரை குறைபாடு வருகிறது. அப்போ, அந்த பல வருடங்களாக அந்த குழந்தைகளை சர்க்கரை குறைபாட்டிலிருந்து காப்பாற்றியது எது?? அப்படி இருக்கும்போது ஏன் சர்க்கரை குறைபாட்டினை குணப்படுத்த முடியாது? கண்டிப்பாக முடியும்!! ஆனால் பல கோடிக்கணக்கான வருமானம் கொடுக்கும் ஆங்கில மருத்துவம் இதற்கு வழி விடாது.
Deleteமரபு வழி பற்றி நன்றாக புரிந்து கொள்ளுங்கள் மரபுவழி என்பது ஜீனில் பதியப் பட்ட விஷயம். ஒருவருக்கு 45 வயதிற்கு சர்க்கரை நோய் வரவேண்டுமென்று ஜீனில் எழுதப்பட்டிருந்தால் அவர் 20 வயதில் குழந்தை பெற்றாலும் அந்தக் குழந்தையின் ஜீனில் "சர்க்கரை 45" என்று ஏற்றப்பட்டு விடும்.என்பது உலகமெங்கும் உள்ள அறிஞர்களால் நோபல் பரிசு கொடுக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட உண்மை. உதாரணமாக நமக்கு பல், பால் சுரக்கும் உறுப்பு, பால் உறுப்புகள், மீசை, தாடி, சொட்டை, நரை ,திரை,எங்கெங்கு எப்பொழுது தோன்ற வேண்டுமென்று நாம் கருவாய் உருவாகும் பொழுதே நமது ஜீனில்(தலை எழுத்து) எழுதப்படுகிறது. விந்துவும் முட்டையும் கலக்கும் போதே நோய் பற்றிய தகவல்களும் கலக்கின்றன. இதில் தாய் தகப்பன், பாட்டிமார்கள், தாத்தாக்கள், ஆகியோரிடமிருந்து எவ்வளவு எப்படி ஏற்படும் என்பதை அறிவதற்கு சில சூத்திரங்களும் உள்ளன. ஜீனில் அந்த நோய்கள் உள்ள இடமும் ஆராயப்பட்டுள்ளது. அதைத்தான் "ஜீன் மேப்பிங்க்"என்கிறார்கள்.
ReplyDeleteஇந்தக் கட்டுரைக்கும் உங்கள் விமர்சனத்துக்கும் சம்பந்தம் இல்லை!........
Deleteநாம் நம் பெற்றோர்களிடமிருந்து நோயை பெருவதில்லை நிறை முடி சொட்டை எல்லாமே அவர்கள் வாழ்ந்த அதே பழக்கங்களுடன் நாமும் வாழ்வதால் தான் நமக்கு அதே அறிகுறிகள் தோன்றுகின்றன. அவர்கள் நமக்கு நோய் பெறவேண்டும் என்று உயில் எழுதிவிட்டு போவதில்லை. நம் ஆரோக்கியம் நம் வாழ்வியலை பொறுத்துதான் இருக்கும். அதனால் உடலை பரிசோதிக்காமல் நம் பழக்க வழக்கங்களை மேம்படுத்த வேண்டும் மேற்கண்ட கட்டுரையில் அதுதான் கூறியிருக்கிறார் திரு கிருஷ்ணசுவாமி !
Deleteநன்றி அருமையான பதிவு; உங்கள் தகவல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது மீண்டும் ஒருமுறை நன்றி ஐயா...
ReplyDeleteநன்றி! வாழ்த்துக்கள் தம்பி!....
Delete