விடுதலை!
ஒவ்வொரு ஆகஸ்ட் 15 அன்றும் வருடம் தோறும் நமது மக்களுக்கு லஞ்சத்திலிருந்து ஒரு நாள் விடுதலை கிடைக்கிறது!
ஆதாவது லஞ்சம் ஒருநாள் தள்ளி வைக்கப்படுகிறது!
காரணம் அன்று அரசு விடுமுறை!
சுதந்திரம்!
பிறருடைய நியாயமான சுதந்திரத்தை மதித்துப் போற்றுபவனும் தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக் கொடுக்காதவனுமே சுதந்திரம் என்பதை உணர்ந்தவன்!
அவனே சுதந்திரமான வாழ்வு வாழத் தகுதி பெற்றவன்!
உலக மக்கள் அனைவரும் அனைத்து வகையிலும் சுதந்திரம் பெற விரும்பும் எனது அன்பு வணக்கங்களும் வாழ்த்துக்களும்!
நேரடியாகவோ மறைமுகமாகவோ தவறு செய்யாமல் , சட்டத்தை மீறாமல் ஒருவரால் வாழவே முடியாது என்கிற ஒரு நிலையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!
இப்படிப்பட்ட நிலையில் வாழ்வதற்கு வெட்கமும் அவமானமும் அடையவேண்டும்!
அதுதான் உண்மையான சுதந்திரத்தை நோக்கிப் பயணிக்க முதல் படியாக அமையும்!
எனதருமை மூவண்ணக் கொடியே!
இன்று உன்னை வணங்கிக் கோடானு கோடி மக்கள் கொண்டாடுகிறார்கள்!
அதைப்பற்றி ஒன்றும் அறியாமல் பலகோடி மக்கள் இன்றும் காடு கழனிகளில் உழைத்துக்கொண்டுள்ளார்கள்!
எண்ணற்ற மக்கள் அணிவகுத்துப் பணிந்து நிற்க எண்ணற்ற கரங்கள் இன்று உன்னை வானில் ஏற்றி மகிழ்கின்றன!
ஆனால் அவற்றில் பல கரைபடிந்த கரங்கள் , வாழத் தகுதியில்லாதவர்களின் கரங்கள்!
அதைத் தடுக்கக் கையாலாத நிலையை உணர்ந்து தேசபக்தர்களின் சார்பின் தலை குனிந்து உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்!

No comments:
Post a Comment