ss

Wednesday, September 25, 2013

அரசியல் ( 53 )

அன்னா ஹசாரே பற்றிய ஒரு உரையாடலில் எனது கருத்துக்கள்.....

அன்னா ஹசாரே எங்கே?.....

யாரோ ஒருவர் ஜன் லோக்பால், ஜன் லோக்பால் என்று சொல்லிக்கொண்டே பாயைப் பிராண்டிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்!.........

நண்பரே! இவர்மேல் மிகவும் மரியாதை வைத்ள்ளீர்கள்போல!... இந்த மண்குதிரை ஆற்றைக் கடக்கும் என்று நம்பிகிறீர்களா?....

இவர் ஒரு பொம்மலாட்ட பொம்மை! சுய மூளை இல்லாதவர்!....

ஊழல் பேர்வழிகளைக்கூட இன்னும்கொஞ்ச காலம் சகித்துக்கொள்ளலாம். இவரைப்போன்ற ஆஷாட பூதிகளை நம்பினால் ஊழல் எதிர்ப்பு என்பது அர்த்தமற்ற ஒன்றாகிவிடும்!....

தன் முயற்சியில் தோல்வி அடைந்த ஒரு காரணத்தால் இவர் இகழ தக்கவர் அல்ல \\\\\\ நிச்சயம் நான் அப்படி இகழ்பவன் அல்ல நண்பரே!....தனி மனிதன் ஒரு இயக்கமாகிவிட மாட்டார்! இவர் தனி மனிதனான தன்னைத்தான் முன் நிறுத்தினார் தவிர எப்போது மக்களை முன் நிறுத்தினார்? தனக்குப் பின்னால் கும்பலை எதிர்பார்த்தவர்தான் இவர்! ஊடகங்களின் விளம்பரத்தால் பெரிதுபடுத்தப்பட்டவர்! ஊழலுக்கு எதிரான இவருடைய கொள்கையைப் பற்றிக் கொஞ்சம் யாராலும் சொல்வீர்களா?....

இவர் புகழேணியின் உச்சியில் இருந்தபோதுகூட நான் இவரை மதித்தது இல்லை! காரணம் இவர் மக்களுக்காக என்ன சொன்னாரோ அது நிறைவேற இவர் வைத்திருக்கும் வழி இவருக்கே தெரியாது என்பதுதான்!

தனி மனிதர்கள் சமூகத்தில் சிறப்பான பாத்திரம் வகிக்கலாம். ஆனால் தனிமனிதர் ஒரு இயக்கம் ஆகக்கூடாது! அதுதான் தனிநபர் வழிபாடாகவும் தனிநபர் சர்வாதிகாரமாகவும் மாறுகிறது!. அதுமட்டுமல்ல அந்தத் தனி நபருக்கு ஏற்ப்படும் கதி அந்த இயக்கத்துக்கும் ஏற்ப்படும்.இந்த வகையில் மக்கள் எண்ணற்றவர்களிடம் ஏமாந்தாகி விட்டது! இனியுமா?....

எவன் ஒருவன் மக்களைப் பற்றிச் சிந்திக்கிறானோ , தனது கருத்துக்களை வெளிப்படுத்துகிறானோ அவன் அரசியல்வாதி ஆகிறான். அவன் எத்தகையவன் என்பதுதான் முக்கியம்! எல்லோரையும் நிந்திப்பது நமக்கு நாமே காறித் துப்பிக்கொள்வது ஆகும்!.


இவர் தளர்ந்துபோய் படுத்துக்கொண்டால் இவருடைய இயக்கம் என்னவாகும்?(அப்படி ஒன்று இருந்தால்தானே ஏதாவது ஆவதற்கு என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறது)

நான் மீண்டும் சொல்கிறேன் நண்பர்களே!

இவர் தோல்வி அடைந்த பின்னால் பழிப்பவன் நான் அல்ல!

ஆரம்பம் முதலே இவர் ஒரு போலி என்பதை நான் சொல்லி வருகிறேன்.

என்னமோ ஊழலை ஒழிக்கப் பிறந்த அவதார புருஷராக இவரை நினைத்த சிலர் அவரை விமர்சிப்பதைத் தாங்கிக்கொள்ள இயலாதவர்களாய் புலம்பிப் பயன் இல்லை!

நாட்டில் ஊழலை ஒழிக்க என்ன வழி என்று இவர் ஏதாவது திட்டம் உருவாக்கினாரா?

அதன்கீழ் மக்களைத் திரட்ட ஏதேனும் முறையான இயக்கத்தைத் துவக்கினாரா?

ஊழல் ஒழிப்பு மட்டுமல்ல தேசப்பற்று மிக்க அனைவரையும் ஒருங்கிணைத்து அநீதிக்கு எதிரான போராட்டம் நடத்த ஏதேனும் முயற்சி செய்தாரா?...

என்ன விஷயம்?

காந்தியவாதி என்ற பெயரை வைத்துக்கொண்டு தேசியக் கொடியைப் பிடித்துக்கொண்டு ஊழலை ஒழிக்கவேண்டும் என்று சொன்னால் அது பெரிய இயக்கம் ஆகிவிடுமா?

தேசியக் கொடியை அவமரியாதை செய்ததற்கு இவர்மேல் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்!

அவரை மதிப்பவர்கள் அவருடைய கொள்கைகளையும் திட்டங்களையும் விளக்கவேண்டும்!

அதைவிட்டுத் திருடன் திருடன் என்று கத்திக்கொண்டே கூட்டத்தில் ஓடும் திருடனைப்போல ஊழல் ஊழல் என்று சொல்லிக்கொண்டே ஊழல் பேர்வழிகளைச் சார்ந்து கதை நடத்தும் ஒருவரை நாடே நம்பவேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

 ஊழல் எதிர்ப்பு உணர்வை மழுங்கடிப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒருவர்தான் அன்னா ஹசாரே! அதனால்தான் ஊழல் பெருச்சாளிகளும் நாட்டை கொள்ளை அடிக்கும் கும்பல்களும் எல்லாம் இந்தத் தனி நபருக்கு முக்கியத்துவம் கொடுத்தன. அதன்மூலம் மக்களை சரியான முறையில் போராடாமல் இவரை நினைத்து நீற்றுப்போகச் செய்தன.அவருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதன்மூலமும் பேச்சுகளுக்கு அழைப்பு விடுப்பதன்மூலமும் இவரை மக்களின் ஏகபோகப் பிரதிநிதியாகக் காண்பித்து கடைசியில் புஷ்வாணமாக்கினார்கள்.....

அவருடைய ஒன்றுக்கும் உதவாத நடைமுறைகளும் அவருக்கு அளிக்கப்பட விளம்பரமும், மக்கள் பிரதிநிதியாக இல்லாத ஒருவருக்கு ஊழல் அரசுகள் கொடுத்த முக்கியத்துவமும், அவருடைய தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இயக்கம் இல்லாமல் இருந்தும் அவரை ஒரு சக்திமானாகச் சித்தரித்ததும் விட வேறு பெரிய ஆதாரங்கள் என்ன வேண்டும்?...

ஒரு எலியைப் பற்றிக்கூட தவறான கருத்தை நான் சொல்ல மாட்டேன் நண்பரே!

நாட்டைப் பீடித்திருக்கும் பெருநோயான ஊழலுக்கு எதிரான ஒரு இயக்கத்தையா தூற்றப்போகிறேன்?

யாருக்காக அப்படி ஒரு தவற்றைச் செய்ய வேண்டும்?

எந்த ஒரு தவறும் நடக்கின்ற அடிப்படைகளைத்தான் ஆதாரங்களாகக் கொள்ள வேண்டும்!

இவர் எப்படி நம்பகமானவர் என்பதை எந்த ஆதாரங்களை வைத்து நம்புவது?.....

அப்படிப்பட்ட ஆதாரங்கள் இல்லாமையே இவர் நம்பத் தகாதவர் என்பதற்கு மேலும் ஒரு முக்கியமான ஆதாரம்!

நாட்டைப் பற்றியும் நாட்டு நிலைமைகள் பற்றியும் அவலங்களுக்குக் காரணங்கள் பற்றியும் அவற்றைச் சரி செய்வதற்கான வழிமுறைகள் பற்றியும் இவருடைய பார்வை என்ன? இவருடைய அரசியல்தான் என்ன? இவர்பின்னால் தேசபக்தர்கள் ஏன் அணி திரளவில்லை? ஏன் இவர் கேலிப் பொருளானார்? என்பதுபற்றியும் எதுவும் சொல்லாமல் ஒரு மனிதரை மகத்தானவர் என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது?

நாட்டைப் பீடித்திருக்கும் ஊழல் என்பது பல தவறுகளின் விளைவே!

அவை ஒன்றுக்கொன்று வேறுபடுத்திப் பார்க்க முடியாதவை...

ஊழலை ஒழிக்கவே அதற்கு முன்னால் வேறு பலவற்றை ஒழிக்க வேண்டும்.

அதனால் ஊழல் ஒழிப்பு என்பது மட்டும் தனியாக இன்றுள்ள நிலையில் சாத்தியம் அல்ல.

சாக்கடையைச் சுத்தம் செய்யாமல் நாற்றத்தைமட்டும் தடுக்க முடியாது!

அதனால்தான் நாட்டை நல்ல பாதையில் வழிநடத்தும் முன்னோடிகள் யாராக இருந்தாலும் அவர் நாட்டின் அனைத்து நிலைமைகளையும் கணக்கில்கொண்டு திட்டம் வகுத்து மக்களை வழிநடத்தக் கூடியவராக இருக்கவேண்டும் என்று சொல்கிறேன்.

அது ஹசாரேயாக இருந்தாலும் சரியே!

அதற்கு முதல் ஆதரவு கொடுக்க நான் தயார்!

ஆனால் அப்படி இல்லை என்பதுதான் இன்றைய நிலை!....
September 21 at 2:41pm · Like

ஊழலுக்கான காரணத்தை ஒழிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது!

லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தால் ஊழல் ஒழிந்திருக்கும் என்றால் அதை நம்பவேண்டும் என்றால் இப்போதுள்ள சட்டங்களைஎல்லாம் முழுமையாகப் பயன்படுத்தி அது இயலாமல் போயிருக்க வேண்டும்.

அப்படியெல்லாம் இதற்கு முன் உள்ள சட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திவிடவில்லை!

ஆகையால் லோக்பால் மசோதா நிறைவேறியிருந்தாலும் அதுவும் பரணில் போடப்படும் பழைய துணிகளில் ஒன்றாகத்தான் ஆகியிருக்கும்.

சட்டங்களைப் புத்தகங்களில் வரைந்தால் மட்டும் போதும் என்றால் இப்போதுள்ள சட்டங்களே போதும்!

ஆனால் அதைக் கையாளும் துறை சட்டவிரோதிகளின் கைகளில் இருந்தால் அந்தச் சட்டம் என்ன செய்யும்?....

தவறுகளுக்குக் காரணமான சமூகக் காரணிகளை ஒழித்துக் கட்டாமல் தவறுகளை ஒழித்துக்கட்ட முடியாது!

ஒரு குடிகாரன் குடியை நிறுத்தாமல் அதற்குச் செலவான பணத்தைச் சேமிக்க முடியாது!

அவன் சேமிக்கவேண்டும் என்றால் அதற்கு முன் நிபந்தனை அவன் குடிகாரனாக இருந்து மாறவேண்டும்....

அப்படித்தான் இதுவும். ஊழலில் இருந்து மக்கள் விடுதலை அடையவேண்டும் என்றால் ஊழலுக்கான காரணிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்!

அத்தகைய சமூக சிந்தனை கொண்டவர்களின் தேசபக்த இயக்கம்தான் நாட்டுக்கு அவசரத் தேவை!

அத்தகைய ஒரு இயக்கமாக ஒன்றை உருவாக்காமல் எந்த முயற்சியும் பயன் அளிக்காது!.....
September 21 at 4:47pm · Like · 2

ஆதாவது இற்றுப்போன தடியைக்கொண்டு எந்தப் பாம்பையும் அடிக்கமுடியாது! அதுபோல அடிப்படை வலுவற்ற கட்டமைக்கப்படாத எந்த ஒரு இயக்கமும் அரசை எதிர்த்துப் போராட முடியாது! அப்படியிருக்க ஒரு தனி மனிதனின் பெயரால் எந்த விரிவான செயல் திட்டமும் இன்றி அரசை எதிர்த்துப் போராட முடியும் என்று நினைக்கும் மனோபாவத்தைத்தான் நான் எதிர்க்கிறேன். அத்தகைய மனோ பாவத்துக்கு ஹசாரே நடவடிக்கைகள் பயன்பட்டதால்தான் அவரை விமர்சிக்கவேண்டியதாக உள்ளது! உண்மையில் அது அவருக்கு எதிரான தாக்குதல் என்பதைவிட அந்த உணர்வுள்ள மக்களுக்கும் அதை ஊழலுக்கு எதிரான பயனுள்ள நடவடிக்கையாக நம்பும் ஊழல் எதிர்ப்பாளர்களான நல்லவர்களின் தவறான நம்பிக்கைக்கும் எதிரான தாக்குதல் ஆகும்! ஹசாரே எனக்கோ என்னையொத்த எண்ணம் படைத்தவர்களுக்கோ எதிரி அல்ல! அதனால் அதைத் தனிமனித வழிபாட்டுக்கு ஈடான தனிமனிதக் குரோதமாகக் கருத முடியாது!.
September 23 at 1:34pm · Like

நான் எப்போதும் தனிப்பட்ட நபர்களை விமர்சிப்பது இல்லை!

காரணம் தனிநபர்களை விட அவர்கள் பங்கேற்கும் சமூக இயக்கம்தான் முக்கியம்!

அப்படி ஒரு இயக்கமாக ஒரு தனிப்பட்ட மனிதரை முன் நிறுத்தும்போது அங்கு விமர்சிக்க கொள்கை கோட்பாடுகளோ திட்டங்களோ இருக்காது!

அப்போது அந்த நிலையில் அந்த மனிதர்தான் விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டும்.

தனிநபர்களை முன் நிறுத்தும் ஒவ்வொரு இயக்கத்துக்கும் அதுதான் நடக்கும்!

அந்த வகையில் தான் அன்னா ஹசாரே இயக்கத்தைப் பார்க்க முடியும்!

அவருடைய பெயரைச் சொல்லாமல், அவருடைய கோரிக்கைகளைச் சொல்லாமல், அவருடைய போராட்டங்களைச் சொல்லாமல் அவருடைய இயக்கத்தைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?.

அது தனிநபர் விமர்சனம் ஆகாது!

தனி நபர் விபர்சனம் என்றால் அவரது தனிப்பட்ட வாழ்வையோ நடவடிக்கைகளையோ ஒழுக்கம், நேர்மை, நாணையம் போன்றவற்றையோ விமர்சித்திருக்க வேண்டும்.

அப்படி அல்லாமல் சமூக சிந்தனையோடு செய்யப்படும் விமர்சனங்களை தனி நபர் துவேசமாகவோ காழ்ப்புணர்வாகவோ கருத முடியாது!....

அப்படிக் கருதினால் அது சரியான அரசியல் பார்வையோ புரிதலோ அல்ல!.
23 hours ago · Like

அவரைப் பற்றிய அத்தாட்சிகள் இந்தப் பதிவுக்கு முக்கியம் அல்ல!

அரசு கொடுக்கும் பட்டங்களெல்லாம் பெரிய விஷயமில்லை என்று அனைவருக்கும் தெரியும்!

அவருடைய இயக்கம் எப்போது எந்த முறையில் தோற்றுவிக்கப்பட்டது?

அதன் அமைப்பு மக்களுக்கும் தலைமைக்கும் எத்தகைய இணைப்பையும் உறவையும் கொண்டிருந்தது?

அந்த அமைப்பு ஊழலைப் பற்றியும் அதன் ஊற்றுக்கண் பற்றியும் அதை ஒழிப்பதற்கான வழிகள் பற்றியும் அதில் மக்களின் பங்களிப்பு பற்றியும் என்ன சொல்கிறது?

நாடு முழுக்க உள்ள ஊழலை ஒழிக்க ஈடுபாடு கொண்டிருக்கும் பலதரப்பட்டவர்களை ஒன்றிணைக்க என்ன பயனுள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது?

அரசை நிர்பந்திக்க எத்தகைய போராட்டங்களை நடத்த எந்த மட்டத்தில் கூடி என்னென்ன திட்டங்கள் வகுக்கப்பட்டன?

எந்த ஸ்தாபன பலத்தை வைத்து மக்களின் பிரதிநிதியாக அரசுடன் மோதினார்?

அவருடைய எந்தப் பலத்தை வைத்து அரசு அவருக்கு மரியாதை கொடுத்தது?.....

அரசு பல வகையிலும் இழுத்தடித்தபோது அதில் சோர்வடையாமல் ஏன் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவில்லை?

துவக்கத்தில் கொஞ்சம் வளைந்து கொடுத்த அரசு அதன்பின் சண்டித்தனம் செய்தபோது இவரால் ஏன் ஒன்றும் செய்ய முடியவில்லை?

இவருடைய போராட்டம் தோல்வி அடைந்ததற்கு ஐவரும் அரசும்தவிர மக்கள் எவ்வகையில் காரணம்?....
22 hours ago · Like

ராணுவக் கட்டுக்கோப்புடன் சரியான கொள்கை கோட்பாட்டுடன் மக்களை அணிதிரட்டினால்...// இதற்கான சாத்தியக்கூறு இந்த தேசத்தில் மிக குறைவு ..\\\\\\அப்படித் திரட்டாதவரை ஊழலுக்கு நாடு அடிமையே!.....
22 hours ago · Like

தனிமனிதத் துதிப்பாடல் என்று நான் சொல்வது பொதுவாக நாட்டுமக்கள் பின்பற்றிவரும் பொது வாழ்வு பற்றிய மன நிலையை! அதன் ஒரு பகுதியாகத்தான் அன்னா ஹசாரே பற்றிய மக்களின் மனப்பாங்கும்! அது உங்களையும் சேர்த்துக் குறித்துவிட்டதுபோலும்?.... வேறு வழி இல்லை! வீட்டின்மேல் மரம் விழுந்தால் அது ஓட்டையும் பாதிக்கவே செய்யும்....
21 hours ago · Like

தமிழ்நாட்டில் நாராயணசாமி நாயுடு என்பவர் தலைமையில் விவசாய சங்கம் ஒன்று மிக வலுவாக இருந்தது! அதன் வீழ்ச்சி தான் ஹசாரே போராட்டம் பயன்தராது என்று நான் துவக்கத்திலேயே முடிவு செய்ததற்குப் பலமான முன்னுதாரணமாக இருந்தது!....

தேசிய கொடியை தாங்கி பிடிக்க இந்த முதியவரை விட தகுதியானவர் இன்று இன்று தேசத்திலேயே குறைவு...\\\\\தேசியக் கோடி ஒரு இயக்கத்தின் கொடி அல்ல! அதை யார்வேண்டுமானாலும் ஏந்திச் செல்லலாம்! ஆனால் அரசை எதிர்க்கும் போராட்டத்தில் ஒரு பதாகையாகப் பயன்படுத்த முடியாது!.... யாராவது ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தால் சரி! அதைவிட நீதி மன்றங்களே அதைக் கண்டித்துத் தடுத்திருக்க வேண்டும்!.....
41 minutes ago · (25.9.2013 3.30 p m )

No comments:

Post a Comment