என்ன கொடுமை இது!...
இது பாசன வாய்க்காலில் ஓர் இடம்....
தண்ணீர் செல்லாத காலங்களில் அதில் தழைக்கின்ற புல் பூண்டுகளை கால்நடைகள் மேயும்.
அதனால் அங்கு மாடுகளின் சாணமும் காய்ந்துபோன வரட்டிகளும் கிடக்கும்.
சாணம் நிலத்துக்கு எருவாகவும் வரட்டி அடுப்புக்கு எரிபொருளாகவும் பயன்படும்.
ஆனால் இன்று....
சாராய பாட்டில்களும் பிளாஸ்டிக் பைகளும்தான் சிதறிக் கிடக்கின்றன...
சாராய பாட்டில்கள் மண்ணுக்கு உரம் ஆகுமா?
பிளாஸ்டிக் பைகள் அடுப்பெரிக்க உதவுமா?....
என்ன கொடுமை இது?....
No comments:
Post a Comment