ss

Tuesday, October 15, 2013

அரசியல் ( 54 )

விமோசனம்....

நமது நாட்டின் அவலங்களுக்கெல்லாம் முக்கியக் காரணம் அஹிம்சை என்ற பித்தலாட்டத்தைச் சொல்லி வீரம் காயடிக்கப்பட்டதே!....

அதனால் நல்லவர்கள்கூட சாராம்சத்தில் கோழைகளாக வாழ்கிறார்கள்!

கோழைகளாக வாழும் நல்லவர்கள் தாங்கள் வீரர்களாகவும் இருக்கவேண்டும் என்ற உணர்வுடன் ஒன்று சேர்ந்தால் நாட்டுக்கு விமோசனம் நிச்சயம்!

(மேலே உள்ள செய்தியை நான் முகநூலில் பதிந்ததற்கு பல விமர்சனங்கள் வந்தன. அவற்றுக்கு நான் அளித்த பதில்களில் இருந்து....) 

நண்பர்களே! சில லட்சம் மக்கள் தொகை உடைய பல நாடுகள் விடுதலை பெற்றதெல்லாம் இந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் அஹிம்சையை வைத்தா?....இத்தனை கோடி மக்கள் வாழும் நாடு வீரத்தைச் சார்ந்திராமல் விடுதலை பெற்றோம் என்று சொல்வது அவமானம் அல்லவா?....

கடந்த ஆறுமாதங்களாக நமது நண்பர்கள் பலர் சேர்ந்து ஒரு கூட்டுப்பண்ணை அமைக்கத் திட்டமிட்டோம்....

அதற்கான விதிகளை வகுத்து நாட்டுக்கே முன்னுதாரணமான இயற்கை வேளாண பண்ணையாக அமைக்கத் திட்டம் வகுக்கப்பட்டது. 

மதுரையில் ஒரு கூட்டம்கூட நடத்தினோம்....

ஆனால் வெட்கக் கேடான விஷயம் என்னவென்றால் கூட்டுறவே நாட்டுயர்வு என்றும் நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணையம் விவசாயம் என்றும் பித்தலாட்டம் பேசுபவர்களின் சட்டதிட்டங்களின்படி அப்படி ஒரு அமைப்பை நாம் விரும்பும் முறையில் அமைக்க வழியே இல்லை என்பதுதான்! 

அப்படியானால் நமது அரசுகள் மக்கள் ஒன்று படுவதை தடுக்கிறது என்பதுதானே பொருள்? இது என்ன நியாயம்?....

அஹிம்சை என்ற மூட்டையில் மக்களைக் கட்டிப்போட்டுவிட்டு அதன் தொடர்ச்சியாக அனைத்து செயல்களும் நாட்டில் மக்களுக்கு எதிராகத்தான் நடக்கின்றன? நாட்டில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சட்டபூர்வமாக வாழும் ஒரே ஒரு மனிதரை நாம் காண முடியுமா? இதுதான் நமக்கு அஹிம்சை வழி தந்த பரிசா?......

மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு இந்த அஹிம்சை எந்த முறையில் வழி காட்டியது? அஹிம்சையைச் செயல் பட அனுமதிக்க முடியாத அளவு தீய சக்திகள் எப்படி வளர்ந்தன?.....அவற்றை அதிகாரத்தில் இருப்பவர்கள் அஹிம்சையை போதித்து ஏன் கட்டுப்படுத்தவில்லை? அஹிம்சை என்னதான் நமக்குக் கொடுத்தது? இனி கொடுக்கப் போகிறது? எந்த அரசு மக்களின்மேல் அஹிம்சை முறையில் ஆட்சி செய்கிறது?....இந்த அஹிம்சையால் அனைத்து ஆலயங்களிலும் அனைத்து மக்களும் சமமாக வழிபட உதவ முடியுமா?.....

வீரம் என்பது நியாயத்தின் பக்கம் உறுதியாய் நிற்பது நண்பர்களே! அது அஹிம்சையின் வழி நின்று நடந்திருந்தால் நாம் வாழ்த்த மாட்டோமா?.....

அஹிம்சை எந்தக் காலத்திலும் ஒரு போராட்டமுறையாக இருக்கவில்லை! அப்படிச் சொல்லப்பட்டது! யாராலும் பின்பற்றப்படவில்லை. அதனால் அப்படி நம்புவதில் பொருள் இல்லை. நமது பொறுப்புக்களை உணர்ந்து கடமாயாற்றவேண்டும் அவ்வளவே!....

.அஹிம்சை தவறு அல்ல! அது நம் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கவேண்டிய பண்பு! அந்தப் பண்பு நம்மிடம் இருப்பதால்தான் சமூகத்தில் மக்கள் படும் ஹிம்சையை எதிர்த்துப் பொருமுகிறோம்!ஆனால் அது மக்களை ஏமாற்றும் முகமூடியாகப் பயன்படுத்தப்பட்டதும் படுவதும்தான் சோகம்!

அஹிம்சையை எங்கு பயன்படுத்தவேண்டும் ஆயுதத்தை எங்கு பயன்படுத்தவேண்டும் என்பதற்கு வரைமுறை இருக்கிறது நண்பர்களே! சே ஆயுதத்தைப் பயன்படுத்தினார் என்றால் பொழுதுபோக்குக்காக அல்ல! விடுதலைக்காக!....அந்த வீரம் இன்றும் உலகில் எண்ணற்ற இளைஞர்களுக்கு வீரத்துக்கு விளக்கம் சொல்லிக்கொண்டு உள்ளது!.

போராட்ட உணர்வும் போராடும் மக்களும் இருக்கிறார்கள் நண்பரே! ஆனால் அவர்களை ஒழுங்குபடுத்தி வழிநடத்தும் சக்திமிக்க நேர்மையான வழிகாட்டும் அமைப்பு இல்லை!

 நியாயத்துக்காகக் குரல்கொடுக்கும் நாம் நம்மைநாமே இழிவுபடுத்திக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை!......நாம் வஞ்சகர்கள் அல்ல!

ஒரு சே உலகின் கண்களுக்குத் தெரியும் வண்ணம் உயரத்தில் இருக்கிறார்! கோடிக்கணக்கான சே க்கள் அமைதியாகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தனிநபர் துதியில் நம்பிக்கை வைக்க வேண்டியது இல்லை. காரணம் அது முகமறியாத் தியாகிகளுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும்!....

நான் பெரும்பாலும் தனி நபர்கள் அவர்கள் எவ்வளவு பெரிய வரலாற்று நாயகர்களாக இருந்தாலும் அவர்களின் பெயர் சொல்லிப் பாராட்டுவதையோ குறைசொல்வதையோ செய்வது இல்லை. காரணம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை! அதனால் அவர்களின் சிறப்புக்களையும் குறைகளையும் அவர்களின் கோட்பாட்டை ஒட்டித்தான் செய்வேன். அந்த வகையில் காந்தியின் பாத்திரத்தை மதிக்கும் என்னால் அவருடைய மாபெரும் வல்லமை வீணடிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை!.....

அஹிம்சை என்பதும் வீரம் என்பதும் சரியான பொருளில் புரிந்துகொள்ளப்பட்டால் குழப்பம் இருக்காது! 

அஹிம்சை என்பது ஒவ்வொருவரும் மற்ற மனிதர்களிடமும் பிற உயிரினங்களிடமும் நடந்துகொள்ளவேண்டிய உயர் பண்பாகும்! 

அனால் அது ஒரு போராட்ட முறையாக முன்வைப்பதுதான் பிரச்சினை! 

அதன் விளைவாக அஹிம்சை பாதிக்கப்பட்ட மக்களைவிட பாதகர்களுக்கே அதிகம் பயன்பட்டது. 

இப்போதும் பயன்பட்டுக்கொண்டு இருக்கிறது! 

மக்களை நிராயுதபாணிகளாக ஆக்குவதைத் தவிர அது ஒன்றும் சராசரி மக்களுக்கு உதவுவது இல்லை! 

ஆனால் வீரம் என்பது அப்படியல்ல! 

அஹிம்சை என்பதும் வீரம் என்பதும் சரியான பொருளில் புரிந்துகொள்ளப்பட்டால் குழப்பம் இருக்காது! 

அஹிம்சை என்பது ஒவ்வொருவரும் மற்ற மனிதர்களிடமும் பிற உயிரினங்களிடமும் நடந்துகொள்ளவேண்டிய உயர் பண்பாகும்! 

அனால் அது ஒரு போராட்ட முறையாக முன்வைப்பதுதான் பிரச்சினை! 

அதன் விளைவாக அஹிம்சை பாதிக்கப்பட்ட மக்களைவிட பாதகர்களுக்கே அதிகம் பயன்பட்டது. 

இப்போதும் பயன்பட்டுக்கொண்டு இருக்கிறது! 

மக்களை நிராயுதபாணிகளாக ஆக்குவதைத் தவிர அது ஒன்றும் சராசரி மக்களுக்கு உதவுவது இல்லை! 

அஹிம்சைக்கு வக்காலத்து வாங்குவோர் அப்படிச் சொல்லி மக்களை ஏமாற்றியதைவிட சாதித்த சாதனைகளை விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும். 

அஹிம்சை வழியில் சுதந்திரம் பெற்றோம் என்கிற பச்சைப் பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்வதைவிட வேறொன்றையும் சொல்லத் தெரியாது! 

காந்தியைத் தவிர அஹிம்சையைப் பின்பற்றியவர்கள் எத்தனைபேர் என்று தேடித்தான் அறிய வேண்டும். 

ஆனால் வீரம் என்பது அப்படியல்ல! 

அஹிம்சைப் பண்புகளுக்கு எதிரான , மக்களிளின் அமைதியான வாழ்வுக்குப் பயன்படாத எதையும் துணிவுடன் எதிர்ப்பதே வீரம் ஆகும். 

காலித்தனமும் அடாவடித் தனமும் மோசடியும் வீரம் ஆகாது! 

நியாயத்துக்காகப் போராடுவதே வீரம்....

அத்தகைய வீரத்தை வளர்ப்பதற்குப் பதிலாக போலி அகிம்சையை மக்களுக்கு உபதேசிப்பதும் ஏமாற்றுவதும் அவர்களுக்கு எதிராக ஆயுதங்களைத் தயார்நிலையில் வைத்திருப்பதும்தான் அஹிம்சை வழி என்றால் அந்த வஞ்சக வழியை ஒழித்துக்கட்டுவதைவிட முக்கியமான பணி எதுவும் இருக்க முடியாது!

 இந்தியாவின் இன்றைய தேவை, ஒரு நல்ல சர்வாதிகாரி என்பது பலருடைய கருத்து! இது சரியான கருத்து அல்ல ! தனியொரு மனிதன் அப்படியொரு நல்லவனாக எந்தப் பின்பலமும் இல்லாமல் இருக்கமுடியாது!...அப்படியொருவன் தவறி உருவானால் அவனது உடல் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்படும் என்பதை அறியவும்....

சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரையும் பாதிக்கக்கூடிய தீமைகளை எதிர்த்து அனைவரும் சகோதரத்துவ உணர்வுடன் போராடவேண்டும்!.....கப்பல் மூழ்கிக்கொண்டிருக்கும்போது அதில் இருந்து ஒற்றுமையாகத் தப்பிப்பதற்குப் பதிலாக தங்களுக்குள் சச்சரவு செய்து மடிவது நியாயம்தானா?

மீண்டும் அழுத்தமாகவே சொல்கிறேன்:
அவர் ஒரு நல்ல சர்வாதிகாரி என்று பிரபாகரனைப் பற்றி ஒரு நண்பர் சொன்னார்! அதற்குச் சொன்ன பதில்:

அப்படிச் சொல்ல உங்களுக்கு முழுச் சுதந்திரம் இருக்கிறது!....ஆனால் என்னால் அப்படிச் சொல்ல முடியாது! காரணம் நான் அவர்கள்மேல் வைத்துள்ள மதிப்பும் மரியாதையும் மிகவும் உயர்ந்தது!...அதனால் அவர்களைப் பற்றி அவர்களே நினைக்காத ஒன்றைச் சொல்வது அவர்களை நிந்திப்பதற்குச் சமமாகும் என்பதே!

சர்வாதிகாரிகளில் நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடு அரசு முறைகளில் கிடையாது! 

இன்றும் இந்தியாவில் நல்ல சர்வாதிஎன்று பலரால் அறியாமையின்காரணமாகப் பாராட்டப்படும் ஒருவர் அடுத்து நடத்திய தேர்தலில் ஏழு மாகாணங்களில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் துடைத்தெறியப்பட்டார்! 

இந்தோனீசியாவிலும், பிலிப்பைன்சிலும், எகிப்திலும் இன்னும் பல நாடுகளிலும் நல்ல சர்வாதிகளின் நிலைமை என்னவாயிற்று என்பதும் தெரிந்ததே! 

அத்தகைய கழிசடைகளில் ஒருவராக ஒரு மாவீரனைச் சித்தரிப்பது அவருக்கு அவமானம்!

அதுதான் ஒரு நாட்டுக்குத் தேவை என்பது முற்றிலும் தவறான ஒன்று! 

தான் யாருக்காகப் போராடினாரோ அந்த மக்கள் அனைவர் நெஞ்சிலும் குடியிருக்கும் ஒரு தியாகியை சர்வாதிகாரி என்று சொல்வது சரியா என்று அந்த அமைப்பின் முன்னோடிகளைக் கேட்டுப் பாருங்கள் சரியான விடை சொல்வார்கள்!....

சர்வாதிகாரி என்ற சொல்லே ஜனநாயகத்துக்கு எதிரானது. அதில் நல்லது கெட்டது என்ற பாகுபாடு எடுபடாது!.....

ஒரு தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள உறவை எப்படி ஒரு சர்வாதிகாரிக்கும் மக்களுக்கும் உள்ள உறவாக உங்களால் ஒப்பிட முடிந்தது? 

மாவீரர்களை சர்வாதிகாரிகளாகச் சித்த்ரிப்பதன்மூலம் அவர்கள்மேல் என் போன்ற எண்ணற்றவர்கள் கொண்டுள்ள உயர் மரியாதையிலும் நல்லெண்ணத்திலும் நஞ்சைக் கலக்காதீர்கள்! 

நல்லாதாக நினைத்துத் தவறான பொருளில் சித்தரிக்கிரீர்கள்!.....

 ஒரு தந்தை தன் பிள்ளைகளை எந்தக் காலத்திலும் விஷவாயு அறைகளில் அடைத்துக் கொல்ல மாட்டான். 

ஆனால் சர்வாதிகாரிகள் செய்வார்கள்...ஈழத்தில் நடந்த படுகொலைகள்கூட ஒரு சர்வாதிகாரி மேற்கொள்ளக்கூடிய பாசிஸ்ட் நடவடிக்கை என்று சொல்லாமல் ஜனநாயக நடவடிக்கை என்று சொல்வீர்களா? 

மாவீரர்கள் சர்வாதிகாரிகள் என்றால் பாசிஸ்டுகள்தான் மாவீரர்களாக இருப்பார்கள்! 

பிரபாகரன் சர்வாதிகாரி என்றால் ராஜபட்சே சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடிய போராளியா?....

.என்ன பார்வை இது?No comments:

Post a Comment