இயற்கை உணவே இணையற்ற உணவு!....
ஒரு தானியத்தை அப்படியே நிலத்தில் இட்டு தண்ணீர் விட்டால் அது முளைக்கிறது.
அதே தானியத்தை வேக வைத்தோ வறுத்தோ நெருப்பில் சூடு படுத்தியோ அதன்பின் விதைத்தால் முளைப்பதில்லை!
அதன் வடிவம் மாறாமல் இருந்தாலும் வெப்பத்தால் குணம் மாறுவதால் முளைக்கும் தன்மையை இழந்து விடுகிறது!
அதே போலத்தான் சமைக்காமல் உண்ணக்கூடிய உணவு வகைகளை சமைத்து உண்ணும்போது அவற்றின் குணம் மாறுவதால் பயனும் குறைந்து போகிறது!
அது தவிர எதிர்மறையான பண்பும் தோன்றுகிறது!
மருத்துவப் பண்புகளையும் இழக்கிறது!
அதனால்தான் இயற்கை உணவே இணையற்ற உணவு என்று மதிக்கப்படுகிறது!....
No comments:
Post a Comment