மண்ணுக்குள் தேன்கூடு!
நண்பர்களே!
தக்கைப்பூண்டின் வேர்கள்தான் இது!
அதில் உள்ள குருணை போன்ற பகுதிகள் எல்லாம் வேர்முடிச்சுக்கள் எனப்படும்.
அந்த வேர் முடிச்சுக்களில் அடங்கியுள்ளவை அந்தத் தாவரம் காற்றில் இருந்தும் நிலத்தில் இருந்தும் சேகரிக்கும் சத்துக்கள் ஆகும்.
ஆதாவது தேனீக்கள் மலர்களில் இருந்து தேன் சேகரித்துக் கூடுகளில் பாதுகாப்பதைப்போல இந்தத் தாவரம் உபரியான சத்துக்களை உருவாக்கித் தனது வேர்முடிச்சுகளில் சேகரிக்கிறது.
அதனால் இவையும் ஒருவகையான தேன் கூடுகளே!
அதனால் மண் இயற்கை முறையில் வளமாவதோடு இதை மடக்கி உழும்போது அந்த முழுச் செடிகளும் மக்கி எருவாகின்றன.
அதனால் இது ஒரு சிறந்த பசுந்தாள் உரப் பயிர் என்பதில் ஐயமில்லை....
No comments:
Post a Comment