ஆத்திகம் நாத்திகம் ஒரு உரையாடல்....
(எனது கருத்துக்கள்)
தம்பி! தவறு செய்ய அஞ்சாதவர்கள் எல்லாம் நாத்திகர்களா?....அப்படியானால் உலகில் தவறே நடக்கக்கூடாதே!...தொண்ணூற்றியொன்பது சதவிகிதம் ஆத்திகர்கள்தானே?.....ஏன் உலகம் இப்படி ஆயிற்று?....
உலகைக் கெடுப்பவர்கள் ஆன்மிகவாதிகளும் அல்ல, நாத்திகவாதிகளும் அல்ல தம்பி!...ஆன்மிகம் என்றால் என்னவென்று அறியாதவர்களும் அவர்களை ஏய்த்துப் பிழைப்பவர்களாயும் உள்ள பெரும்பாலோர்தான் தம்பி! அவர்களை யாரும் கெடுக்கவில்லை! யோக்கியதையே அவ்வளவுதான்.....
ஆன்மிகமும் ஆன்மிக மறுப்பும் இருவேறு பாதைகள்! அதில் சரியாக நடப்பவர்கள் தவறு செய்ய மாட்டார்கள். மோதிக் கொள்ளவும் மாட்டார்கள்....
(நண்பர் : அண்ணா...! இக்காலத்தில் உண்மையான ஆன்மீகவாதிகள் உண்மையிலேயே உள்ளார்களா அண்ணா...?)
நான் : நான் அப்படி ஒருவரைத்தான் தேடிக்கொண்டு தனிமரமாக இருக்கிறேன் தம்பி!.....!
கடவுளின் பெயரைச் சொல்பவன் எல்லாம் ஆன்மிகவாதி அல்ல! கடவுளுக்குப் பிடித்தமான பண்புகளாகச் சொல்லப்படும் உயர்பண்புகளுடன் வாழ்பவனே உண்மையான ஆன்மிகவாதி!....
உண்மையான ஆன்மிகவாதி தன்னைப் பரம்பொருளில் இருந்து வேறுபட்ட அன்னியனாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது! தன்னை மட்டுமல்ல அனைத்தையும் பரம்பொருளின் உள்ளடக்கமாகவும் உறுப்புக்களாகவும் காண்பவன்தான் ஆன்மிகத்தை உணர்ந்தவன்!....
உண்மையான ஆன்மிகவாதி யாரையும் எதையும் வணங்கவேண்டியது இல்லை! காரணம் ஒருவன் தன்னைத் தானே வணங்கிக்கொள்ள முடியாது!....
தம்பி! நான் சத்தியத்துக்காகப் போராடும் ஒரு சாதாரண மனிதனே! என்னைப் பலர் நாத்திகன் என்கின்றனர். மற்றும் பலர் ஆத்திகன் என்கின்றனர்... ஆனால் உண்மையில் ஆன்மிகத்தில் எனது பாதை ஒரு புதுப்பாதை. அது ஆன்மிகத்தையும் அறிவியலையும் ஒன்றிணைக்கிறது! மூட நம்பிக்கைகளை ஒழித்துக்கட்ட விரும்புகிறது!
ஆன்மிகமும் அறிவியலும் இரு தண்டவாளங்களைப் போல இணைந்து பயணிக்கக் கோருகிறது!....
மோசடிப் பேர்வழிகள் உண்மையான ஆத்திகனாகவோ உண்மையான நாத்திகனாகவோ இருக்க முடியாது....அவர்கள் சமூக விரோதிகள்! அவ்வளவே!....
ஒன்றைமட்டும் மனதில் கொள்ள வேண்டும். நாட்டைக் கெடுத்தவர்கள் உண்மையான ஆன்மிகவாதிகளோ உண்மையான நாத்திக வாதிகளோ அல்ல! இவை இரண்டின்பேரைச் சொல்லிக்கொண்டு ஏய்த்துப் பிழைப்பவர்களும்!.... அவர்களை நம்புபவர்களுமே!....
அதற்குப் பிறகும் இங்கே மக்கள் எனும் போர்வையில் வாழும் மாக்கள் அவர்களை தெய்வமாக வணங்குவதும் ஏனோ?\\\\\
தம்பி! நாறிப்போன சூழலில் வாழ்பவனுக்கு வேறு நாற்றம் உரைக்காது! அதுபோல மனதளவில் குற்றவாளிகளாகவும் மூடர்களாகவும் வாழ்பவர்களுக்கு மற்றவனின் குற்றமும் மூடத்தனமும் உரைக்காது!......
No comments:
Post a Comment