மாமிசம் வேறுபாடும் முக்கியத்துவமும்.
(ஆட்டுக் கறியையும் கோழிக் கறியையும் பன்றிக் கறியையும் மீன் கறியையும் மூக்குப் பிடிக்கத் தின்றுவிட்டு மாட்டுக் கறி உண்பவர்களைப் பழிப்பதும் சபிப்பதும் எப்படிச் சிலருக்குச் சாத்தியமாகிறது?....
அதில் உள்ள தர்மத்தைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை....========
இப்படி ஒரு பதிவை முகநூலில் பதிந்திருந்தேன்...
ஆனால் அதன் நியாயத்தைப் புரிந்துகொள்ளாமல் சிலர் தவறாக விமர்சனம் செய்தனர். தவறான கருத்துக்களை முன்வைத்தனர்..
அவர்களுக்கான பதிலாக இக்கட்டுரை.....)
மாமிசம் என்றால் அனைத்து மாமிசமும் வேறுபட்டதாக இருந்தாலும் உயிரினத்தின் உடல் என்கிற அடிப்படையில் ஒன்றே!
அதனால் மாமிசம் உண்ணுவது உண்ணாதிருப்பது என்கிற இருவகையில் மட்டுமே உணவைப் பிரிக்க முடியும்!...
மற்ற படி இந்த மாமிசத்தை உண்பது சரி! இந்த மாமிசம் உண்பது தவறு என்பது அவரவர் விருப்பத்தையும் பழக்கத்தையும் சார்ந்தது!..
ஒருவருக்கொருவர் பழி சுமத்துவது தவறு என்பதே இந்தப் பதிவில் சொல்லப் பட்டுள்ளது!...
அதற்குப் பதிலாகச் சொல்லப்பட்ட செய்திகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட மக்களைப் பிரதி பலிக்கிறதே தவிர அனைத்து மக்களையும் அல்ல!..
அதில் முக்கியமானது மாட்டை வணங்குகிறோம் என்பது!...
எதைத்தான் வணங்கவில்லை?
அது நமக்காக உழைக்கிறது என்பது ....
வேறு பல உயிரினங்களும் நமக்காக உழைக்கும்போதும், பால் கொடுக்கும்போதும் மாட்டைத் தவிர மற்றவற்றை என் நினைப்பதில்லை?
வணங்குவதில் உள்ள முரண்பாட்டை என் யாரும் நினைப்பதில்லை?
முதல்நாள் படையைல் படைத்து வழிபட்டுவிட்டு மறுநாளே அதன் தலையில் வைத்த பொட்டும் சந்கனமும் அழிவதற்கு முன்பே அடிமாட்டுக்காரருக்கு விற்பது உண்டா இல்லையா?
அது ஏன் நடக்கிறது?...
அந்த மனிதருக்கு அது காலமும் தங்களுக்குப் பால் கொடுத்த தங்களுக்கு உழைத்த அந்த மாட்டின்மேல் அக்கறையும் அன்பும் இருக்காதா?
அவர்கள் இரக்கமற்ற அரக்கர்களா?...
நூற்றுக்குத் தொண்ணூறு பேர் தங்களுக்காக வாழ்ந்த மாட்டின்மேல் நன்றி இல்லாமல் போனதாகவே வைத்துக் கொள்வோம்...
நன்றியுள்ள அந்த மீதிப்பேர், ஆதாவது தங்களுக்கு உழைத்த மாடுகளைக் கடைசிவரை உணவளித்துப் பாதுகாத்தவர் யாராவது உண்டா?...
யாருக்காக உபதேசம்?...
மாட்டுக் கறி உண்ணாததற்குக் காரணம் பழக்கமின்மைதானே தவிர இரக்க குணமோ, நன்றி உணர்வோ, பழி பாவத்துக்கு அஞ்சியோ அல்ல!...
மாடுகள் உட்பட மனிதன் வளர்க்கும் ஒவ்வொரு உயிரினத்தையும் சுயநலத்துக்காகவே வளர்க்கிறோம்.
அவற்றால் பயன் இருக்கும் வரை வைத்திருப்போம். பயனில்லாவிட்டாலோ தேவை இல்லாவிட்டாலோ அவற்றை அதன்பின் பாதுகாப்போர் யாரும் இல்லை!
அதுதான் மனித இனத்தின் மற்ற உயிரினங்களுக்கான விதி!...
இந்த விதியின்படி பல மாமிசத்துக்காக மட்டும் வளர்க்கப் படுகின்றன. வேறு சில உழைப்புக்காக மட்டும் வளர்க்கப்படுகின்றன. தோலுக்காகவும் மேல் முடிக்காக்கவும்கூட வளர்க்கப்படுகின்றன.
மாடுகளோ பாலுக்காகவும் உழைப்புக்காகவும் அதற்குப் பயன்படாமல் போனால் மாமிசத்துக்காகவும் தோலுக்காகவும் வளர்க்கப் படுகின்றன.
அப்படி இல்லாவிட்டால் மாடுகள் அனைத்தும் தலைமுறை தலைமுறையாகப் பல்கிப் பெருகி உலகில் அவற்றின் எண்ணிக்கை கட்டுக்கடங்காத அளவு அதிகரித்திருக்க வேண்டுமே! ஒவ்வொரு கிராமத்திலும் வீடுகளிலும் பண்ணைகளிலும் எண்ணற்ற மாடுகள் இருந்திருக்க வேண்டுமே?
அவையெல்லாம் எங்கே போயின?
யாராவது திருடிக்கொண்டு போய்விட்டார்களா?
அல்லது ஊருக்கு ஊர் அவற்றுக்கான இடுகாடுகளில் அடக்கம் செய்திருக்கிறார்களா?
இல்லையே!...பயனற்ற அனைத்தையும் தின்று தீர்த்திருக்கிறோம். அல்லது தின்பவர்களுக்கு காசுக்காக விற்றிருக்கிறோம்!...
அப்படி இல்லாமல் தாயினும் மேலான மாடுகளைக் கடைசிவரை காப்பாற்றிக் காடு சேர்த்துக் கல்லறையும் கட்டி வழிபட்ட எத்தனைபேர் இருக்கிறார்கள்?...
அப்படியானால் அந்தக் குடியானவர்கள் எல்லாம் பசுவைக் கொன்ற பாவிகளா?...
பயன் கருதிச் சந்தையில் வாங்குகிறோம். பயனில்லை என்றால் சந்தையில் விற்று விடுகிறோம்.
அப்படிப் பயனற்ற நிலையில் விற்கப்படும் மாடுகளை அழிவில் இருந்து காப்பாற்ற ஏதேனும் திட்டம் உள்ளதா?...
மாடுகளை கடைசிவரை வைத்திருக்க வாய்ப்பில்லாத நிலையில் அதை விற்றுப் பிழைக்கவேண்டியவனாகக் குடியானவன் உள்ள நிலையில் அதைக் கடவுளாக வணங்குகிறோம் என்ற பொய்யான காரணத்தைச் சொல்லி போலி நாடகம் ஆடாமல் அவற்றைக் காப்பாற்ற என்ன திட்டம் உளது என்பதையும் அவற்றின் தீவனத்துக்கு வழி என்ன என்பதையும் விளக்க முடிந்தால் விளக்கலாம்.
மனித சமுதாயத்தில் மாடுகளின் பங்கைச் சமூகக் கண்ணோட்டத்துடன்தான் பார்க்கவேண்டும்...
அதைவிட்டுப் போகாத ஊருக்கு வழிகாட்டிப் பயன் இல்லை!
சிந்திக்க வேண்டும்....
அவை வாழும்வரை துன்புறுத்தாமல் காப்பாற்றவேண்டும் என்பதே இப்போதைய நிலையில் நாம் செய்யக் கூடியது.
அவற்றைக் கடைசிவரை கொல்லாமல் காப்பாற்றவேண்டும், அதன் மாமிசம் உண்ணக்கூடாது என்றெல்லாம் சொல்வது அதை ஏற்றுக் கொள்ளும் சமூக மனப்பான்மையையும் அமலாக்கும் சாத்தியப் பாடுகளையும் திட்டங்களையும் வாய்ப்புகளையும் பொறுத்தே இருக்கின்றது!
அந்த சமூகப் பழக்கங்களும், சாத்தியப் பாடுகளும் திட்டங்களுமே இந்தப் பதிவுக்கு விமர்சனமாக இருக்கமுடியும்...
உலகளாவிய கண்ணோட்டத்தில்தான் இதைப் பார்க்க முடியும்!...
(இதைச் சொல்வதால் மாடுகளைக் கொல்வதை நான் ஆதரிக்கிறேன் என்ற கூச்சலைப் பல முறை நான் கேட்டிருக்கிறேன்...
ஆனால் மாடுகளின்மேல் என்னைவிடக் கூடுதல் அக்கறை உடையவர்களாக நான் யாரையும் கருதவில்லை....)

சத்தியத்தின் பாதையில் பயணம்
ReplyDeleteஉங்கள் வார்த்தை எழுத்து உண்மையாய் இருக்கிறது .....
மானுட உணர்வுகள் பல வீதம் ...........
நீங்கள் அறிவின் வீழிப்பில் வாழ்கிறீர்கள்
உண்பது யாவும் பாவம் தானே வீழ்ந்த கனிகள் உண்பது தவிர வழி இல்லை ................
இயற்கையின் ஒரு அங்கமாக வாழும் அனைத்து உயிர்களுமே தத்தமக்கு இயைந்த முறையில் வாழ்கின்றன. அதில் மனிதராகிய நாமும் நமக்கு இயற்கை அனுமதித்த வாழ்க்கை முறையைப் பாரபட்சமில்லாமல் வாழ்வதே சிறந்தது. வாழும்வரை மற்ற உயிரினங்களுடன் எப்படி வாழ்வது நடைமுறை சாத்தியமோ அப்படித்தான் வாழ முடியும்!...அந்த முறையில் பார்க்கும்போது ஒன்று வாழும்வரை அவற்றை நேசிக்கலாம். ஆனால் இறுதிவரை அனைத்தையும் காப்பாற்ற மனிதனால் முடியாது என்பதுதான் இப்போதைய மனித வாழ்வின் நிலைமை!...நன்றி நண்பரே!....
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி ஐயா.
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றிகள் ஐயா!...
Delete