ஏன் கூடாது?....
ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் வேதம் சொல்வதில் உள்ள நல்லவற்றை மிகவும் போற்றுகிறார்கள்.
தங்கள் வேதங்கள் சொல்லும் தவறானவற்றை ஒப்புக்கொள்ளாமல் ஏதாவது வியாக்கியானம் சொல்லிச் சமாளிக்கவே நினைக்கிறார்கள்!
மற்ற மதங்கள் சொல்லும் நல்லவற்றைக் காண மறுக்கிறார்கள்.
மற்ற மதங்களில் காணும் குறைகளைப் பற்றி இழிவாக விமர்சிக்கிறார்கள்.
இது அனைவரின் பொதுப் பண்பு!
இதனால் விளையும் நன்மைகள் என்ன?
கசப்புணர்வும் பகைமையுமே!...
அதற்கு மாற்றாக இப்படி ஏன் செய்யக் கூடாது?
ஒவ்வொருவரும் தங்கள் மதங்களில் உள்ள குறைகளைக் களைய முயற்சி செய்யலாம்.
தங்கள் மதங்களிலும் மற்ற மதங்களிலும் உள்ள நல்ல அம்சங்களைப் பொதுவாக நினைத்து மகிழும் அதே நேரம் அனைத்துத் தரப்பிலும் உள்ள தவறான அம்சங்கள் குறித்து நட்பு ரீதியாக உரையாடலாம்.
தங்கள் மதம் சம்பந்தப் பட்ட விழாக்களில் விருந்துக்கு மட்டும் அழைக்காமல் ஆன்மிக விஷயங்களுக்கும் அழைப்பு விடுக்கலாம்.
இதன் காரணமாக அனைத்து மதங்களைப் பின்பற்றும் மக்களிடையே சகோதரத்துவம் வளர்வதால் வேற்றுமைகள் படிப்படியாக ஒழித்துக் கட்டப்பட்டு மத வேறுபாடுகள் மறைந்து அனைவரும் ஒரே தர்மத்தில் மானிட தர்மத்தில் சங்கமிக்கலாமே!....
இருக்கும் குறைகளை குறைகளாக ஒத்துக் கொள்வதில்லை... / அறிவதும் இல்லை... பிறகு தான் குறைகளைக் களைய முயற்சி செய்யலாம் ஐயா...
ReplyDeleteஇன்றைய பதிவில் சில குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்... முக்கியமாக :
ReplyDelete2. வாசகர்களை மனிதனாக நினைத்து, Word Verification-யை நீக்க...!
4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!
6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!
லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-3.html
நன்றி ஐயா...