மாயையும் யதார்த்தமும்....
பொதுவாக மக்களிடம் ஒரு பழக்கம் உள்ளது!
ஆதாவது தங்களுக்குக் காரணம் தெரியாத நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் விதி என்பதுதான் அது!
அதன் மறு வடிவம்தான் இந்த மாயை என்பது!...
நாம் காணும் உணரும் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு கணமும் மாறும் குணமுடையதே!
மாறாதது எதுவும் இல்லை!
இந்த நிலையில் மாறும் ஒவ்வொன்றும் ஆதாவது நிலையற்ற ஒவ்வொன்றும் மாயை என்றால் அனைத்தும் மாயைதான் என்று ஆகிவிடும்.
நாம் எதையெல்லாம் மாயை என்று நினைக்கிறோமோ அவற்றின் கலவைதான் வாழ்க்கை!
அதனால் வாழ்வை யதார்த்தம் என்று நினைத்தால் அதுதான் ஸ்தூல வாழ்க்கை!
மாயை என்று நினைத்தால் அது பொருளற்ற ஒரு மாயைதான்.
ஆனால் ஸ்தூல வாழ்வை அடிப்படையாகக் கொண்டுதான் அனைத்தும் நடக்கின்றன.
மாயை என்று பேச்சளவில் சொல்கிறோமே தவிர ஒரு கொசுவைக்கூட மாயை என்று நினைத்து நாம் விட்டுவைப்பது இல்லை!.....
வாழ்வை யதார்த்தம் என்று நினைத்தால் கடமைகளைத் திட்டமிட்டுச் செய்யமுடியும்! முயற்சி முன்னிலை வகிக்கும்.
மாயை என்று நினைத்தால் முயற்சி பின்னுக்குப் போய்விடும்.
அவசியம் என்று நினைக்கப்படும் ஒவ்வொன்றையும் மாயை என்று சொல்லிப் புறக்கணிக்கவும் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கவும் இந்த மாயை வசதியாகப் போய்விடும்.
அதே சமயம் அறிவாற்றலும் செயலூக்கமும் உள்ளவர்கள் அனைத்தையும் நிலையற்றுலகில் நிலையானதாகத் தோன்றும் அம்சங்களே என்ற உண்மையை உணர்ந்து செயல்பட்டால் செயல்பாட்டில் தெளிவும் உறுதியும் இருக்கும். எதையும் துன்பங்களாக எண்ணி வருந்த அவசியம் இருக்காது!
சபாஷ் அண்ணா
ReplyDeleteஎனக்கு என எழுதிய கட்டுரை அண்ணா