தேர்தல் கேள்விகள் 2014
தேர்தல் கேள்விகள்....(1)
நல்லவங்களுக்கு ஓட்டுப் போடச் சொல்லும் நண்பர்களே!
வேட்பாளர் பட்டியலில் நல்லவர்கள் யார் என்று யாருக்குத் தெரியும்?
அப்படி ஒரு நல்ல மனுஷன் இருந்தா அவர் நல்ல மனுஷன் அப்படின்னு அனைத்து மக்களுக்கும் சொல்லி அவருக்கு ஓட்டுப் போடவைப்பது எப்படி?...
தேர்தல் கேள்விகள்....(2)
தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் அனுமதிக்கப் படுவதற்குச் சம்பந்தம் இல்லாத அளவு கோடி கோடிகளாகச் செலவு செய்கிறார்கள்!
இது எதற்காக?
கோடிகளைக் கொட்டியாவது மக்களுக்குச் சேவைசெய்ய வாய்ப்பை எதிர்பார்த்தா?
அல்லது தேர்தலில் சில விதைகளை விட்டெறிந்தால் அதன்பின் பலகோடி விதைகளை அறுவடை செய்யலாம் என்ற கொள்ளைக்காரத் தனமா?...
இது அனைவருக்கும் தெரிந்திருந்தும் இதை ஜனநாயகம் என்று சொல்வது எந்த நீதியின் அடிப்படையில்?....
தேர்தல் கேள்விகள்....(3)
ஒரு ஜனநாயக நாட்டில் எல்லோரும் சமமான உரிமை பெற்றவர்களே!
ஆனால் அனைவருமே ஆட்சிப் பொறுப்புகளில் அமர்வது முடியாது!
அதனால் தங்கள் பிரதிநிதிகள் மூலம் தங்களைத் தாங்களே ஆள்வதுதான் ஜனநாயகம்!
இப்போது கேள்வி என்னவென்றால் நமது தேர்தல்களில் வாக்களிக்கும் எத்தனைபேர் தங்களின் வாக்களிக்கும் ஜனநாயகக் கடமையைப் பற்றி அறிந்திருக்கிறார்கள்?
வேட்பாளர்களில் அல்லது வெற்றி பெறுபவர்களில் எத்தனைபேர் மக்களுக்கான தங்கள் கடமையை உள்ளபடியே அறிந்திருக்கிறார்கள்?
இரண்டும் இல்லாத நிலையில் நடைபெறும் தேர்தல் எப்படி உண்மையான ஜன நாயகம் ஆகும்?...
தேர்தல் கேள்விகள் ( 4 )
தேர்தல் கேள்விகள்....(5)
கேள்வி எண் : 6
தேர்தல் கேள்விகள் ( 7 )........
நல்லவர்களைப் பார்த்து மக்கள் ஒட்டுப்போடுவதில்லை என்று சொல்லும் நண்பர்களே!...
இந்தப் படத்தில் உள்ள நல்லவரை விட யாரைப் பார்க்கமுடியும்?
ஜாதவ் பயங்......எந்த சுயநலமும் இல்லாமல் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் தனிமனிதனாக இருந்து தனது வாழ்வை அர்ப்பணித்துக் காடு வளர்த்தவர்!
இவர் நாட்டின் எந்தத் தொகுதியில் நின்றால் ஜெயிக்க வைப்பீர்கள்? அல்லது டெபாசிட் பணத்துக்கு உறுதி அளிப்பீர்கள்?
தேர்தல் கேள்விகள் ( 8 )
தேர்தல் கேள்விகள்...( 9 )
தேர்தல் கேள்விகள்.....( 10 )
தேர்தல் கேள்விகள் 11.....
நண்பர்களே!
என்னைப் பொருத்தவரை எனக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கும் ஒவ்வொருவரும் தகுதி அற்றவரே!....
ஒருவருடைய சிறப்பான பண்புகளை முன்வைத்து மக்களில் ஒரு பகுதியினர் அவரை விரும்ப வேண்டும்.
அவருடைய சம்மதத்துடன் அவரைப் பிரதிநிதியாகத் தேர்வு செய்யலாம் என்று மற்றவர்களிடமும் விளக்கிச் சொல்லி வாக்குக் கேட்க வேண்டும்.
அப்போதுதான் அவர் சிறப்பான தகுதி உடையவர் ஆகிறார்!.....
ஒரு மிகச் சிறந்த சமூகத் தொண்டர் தன்னைத் தேர்ந்தெடுங்கள் என்று கேட்கக் கூடாது!
மக்கள்தான் அவரைத் தங்களின் பிரதிநிதியாக இருக்கவேண்டும் என்று கேட்டு அன்புக் கட்டளை இடவேண்டும்!....
ஆனால் இங்கோ!.......கொடுமை! கொடுமை!......
தேர்தல் கேள்விகள்....(12)
தேர்தல் கேள்விகள் ( 13 )
தேர்தல் கேள்விகள்.....17....
தேர்தல் சுனாமி தடுக்க இயலாத வேகத்தில் கற்றைகளால் தாக்கிக்கொண்டு உள்ளது!.....
ஜனநாயகம் நிர்மூலமாக்கப்படுகிறது!....
தப்பிக்க வழி இல்லாமல் மக்கள் திணறிக்கொண்டுள்ளார்கள்....
இப்போது இறைக்கப்பட்ட இறைக்கப்படும் பணம் யாருடையதோ அல்ல!....
மக்களிடம் கொள்ளையடித்த பணமே!....
அது மீண்டும் மக்களிடம் விதைக்கப்படுகிறது...
பின்னாளில் ஒன்றுக்கு நூறாக அறுவடை செய்யப்படும்!...
மக்கள் உணர்வது எப்போது?....
தேர்தல் கேள்விகள் ( 19 )
நாட்டின் எந்தக் கோடியிலாவது ஏதாவது ஒரு பெரிய தவறு நடந்துவிட்டால் சிறு தடையம் கிடைத்தாலும் கையும் களவுமாகப் பிடித்து விட முடிகிறது!....
ஆனால் ஓட்டுக்காக லஞ்சம் கொடுக்கும் பணி (!) யும் முறைகேடுகளும் பல்லாயிரக் கணக்கானவர்களால் பட்டி தொட்டியெல்லாம் சந்து பொந்தெல்லாம் நெட் ஒர்க்காக நடந்தாலும் ஒரு வேட்பாளர்கூடப் பிடிபட்டு முட்டிக்கு முட்டி தட்டபடுவதில்லையே!
அத்தனை பேரும் யோக்கியர்களா?...
இது சம்பந்தப்பட்ட யாருக்குமே தெரியாதா?....
தெருவில் போவோர் வருவோர்தான் அகப்படுகிறார்களா?....
நீதித்துறையில் இருந்து அத்தனை துறைகளும் அறிந்தே நடக்கும் இந்தக் கூத்தை கூச்சனாச்சம் இல்லாமல் எப்படி ஜனநாயகம் என்று அழைக்க முடிகிறது?...
இப்படிப்பட்டவர்களால் அமையும் ஆட்சி எப்படி நல்லாட்சியாக இருக்க முடியும்?...
இதில் ஓட்டுப் போடுவது புனிதக் கடமையாம் .......
தேர்தல் கேள்விகள்.......( 20 )
ஊழல் வண்டி....அல்லது அரசியல் திருடர்கள்
பெரும்பாலான அரசியல் கட்சிகளும் பெரும்பாலான அரசியல் தலைவர்களும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தூய ஆட்சியைத் தருவதாகவும் மக்களின் குறைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பதாகவும் வாக்குறுதி கொடுக்கிறார்கள்...
ஆனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுடைய பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை.
மாறாக வளர்ந்துகொண்டே இருக்கிறது!
ஆள்கின்ற ஆட்களில்தான் மாற்றமே தவிர மக்களுக்கான சேவைகளில் அனைவரும் ஒன்றே!....
ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு விதமான ஆட்களையும் புதுப் புது வாக்குறுதிகளை மட்டும் பார்க்க முடிகிறது....
இதற்கு முடிவே இல்லையா?
இதற்குக் காரணம் என்ன?
இதற்கான காரணங்களை யாராவது சொல்கிறார்களா?...
நன்றாக சிந்தித்துப் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும்!
நமது நாட்டு அரசு நிர்வாக இயந்திரம் ஒரு ஊழல் வண்டி!
அது அனைத்து வகையான தவறுகளும்தான் உள்ளடக்கியது!
மக்களுடைய துன்ப துயரங்களுக்கெல்லாம் யார் காரணமோ அவர்களுக்கு மட்டுமே பயன்படும் வகையில் வடிவமைக்கப் பட்டது.
அதில் உயர்ந்த பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் சேவையையும் சட்டதிட்டங்களின்பால் உண்மையான விசுவாசத்தையும் எதிர்பார்க்க முடியாது!...
அது நல்லவர்களையும் தேசபக்தர்களையும் அவமதிக்கும்! மாறாக கிரிமினல்களை வாழவைக்கும்!
இத்தனை தகுதிகள் உள்ள ஊழல் வண்டியில்தான் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் பயணம் செய்கிறார்கள்.
ஊழல் செய்பவர்களும், அதைப் பயன்படுத்தத் தெரிந்த கயவர்களும், சட்டத்தின் நல்ல அம்சங்களைஎல்லாம் செயலிழக்கவைத்து அதைக் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் மக்கள் விரோதிகளும் மட்டுமே அதில் பயன் அடைபவர்கள் ஆவர்.
அத்தகைய ஊழல் வண்டியில் பயணித்துக்கொண்டே அதில் கிடைக்கும் முறைகேடான ஆதாயங்களை அனுபவித்துக்கொண்டே அதைப் பயன்படுத்தி மக்களுக்கு மகத்தான சாதனைகளைச் செய்யப்போவதாக வாய்கூசாமல் சொல்கிறார்கள்!
அதன்மூலம் கள்ளத்தனமாகப் பயன் அடைபவர்கள் மக்கள் மத்தியில் மாற்றி மாற்றிப் பொய் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது! காரணம் அவர்களின் தர்மம் அது!
ஆனால் காலாகாலத்துக்கும் திருடர்களையும் கொள்ளைக்காரர்களையும் அவர்கள் சொல்லும் பொய்களையும் நம்பி நம்பி ஏமாந்துகொண்டு இருப்பதுதான் மக்களின் கடமையா?....
யாரை நம்புவது என்பதில் ஒரு அளவுகோல் வேண்டாமா?
மேலே சொல்லப்பட்ட நிரந்தரமான அமைப்பான ஊழல் அரசு இயந்திரத்தை அக்கு வேறு ஆணி வேறாகக் கழட்டி அதில் உள்ள தவறான பாகங்களைஎல்லாம் தூக்கி எறிந்து விட்டு ஊழலற்ற மக்களுக்கு உண்மையான சேவை செய்யும் அமைப்பாக மாற்றுகிறோம் என்று யார் சொல்கிறார்களோ அப்படிச் சொல்வதற்கான கோட்பாடுகளையும் செயல் திட்டத்தையும் யார் கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான் நம்பிக்கைக்கு உரியவர்கள்!....
காரணம் இப்போது உள்ள அரசு இயந்திரமும் அதன் விதிகளும் அந்நியர்கள் தங்களுக்கு அடிமைகளாய் நம் தாய்நாடு இருக்கவேண்டும் என்பதற்காகவே உருவாக்கப் பட்டவை!
அவர்கள் இருந்தவரை அவர்களுக்கு விசுவாசமாகச் சேவை செய்ய மட்டும் பயன்பட்டது....
ஆனால் அவர்கள் சென்றபின்னால் அதே அரசு இயந்திரம் நம் சொந்த நாட்டின் சுயநலவாதிகளின் கைக்கருவியாக மாற்றப்பட்டது!
அதில் ஒரே ஒரு பெரும் மாற்றம் மட்டும் செய்யப்பட்டது.
ஆதாவது வெள்ளையன் இருந்த இடத்தில் நமது நாட்டுக் கொள்ளையர்கள் அமர்ந்ததோடு அரசு இயந்திரமும் ஊழல் மயமாக்கப் பட்டது!
அதைக்கொண்டு சுயநலவாதிகளும் நாட்டுப் பற்றற்றவர்களும் அந்நிய விசுவாசிகளும் மட்டுமே பயனடைய முடியும்.
நல்லவர்களும் நாட்டுப் பற்று மிக்கவர்களும் பாடுபடும் சாதாரண மக்களும் ஏழை எளியவர்களும் தன்மானம் இல்லாத வாழ்வு மட்டுமே வாழ முடியும்!....
அப்படிப்பட்ட மோசமான அரசு இயந்திரத்தை மாற்றி அமைப்பதைவிட உயர்ந்த மக்கள் பணி எதுவாக இருக்க முடியும்?....
அப்படி யாராவது திட்டவட்டமான வாக்குறுதியைக் கொடுக்கிறார்களா? அதற்கான அவர்களின் தகுதியைத் தெளிவாக்கி இருக்கிறார்களா?
ஆம் என்றால் அவர்களை நம்பலாம்!
நம்பிப் பின்னால் ஓடுவது அல்ல! அனைவரும் அணிவகுத்து உன்னதமான அரசமைப்பையும் அரசியல் அமைப்பையும் உருவாக்கலாம்.
துரதிருஷ்ட வசமாக அப்படி மிகச் சரியான சக்திகள் நமக்கு முன்னால் இல்லை என்பதே உண்மை!...
Subash Krishnasamy
http://www.drumsoftruth.com/2014/04/60.html
தேர்தல் கேள்விகள் ( 21 )

கட்சிகளின்ன் தலைவர்கள் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும் மக்களின் எதிரிகளாக இருந்தாலும், ஊழலில் ஊறிப் போனவர்களாக இருந்தாலும் தண்டனைக்குரிய குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள்தான் கட்சி என்று மற்றவர்கள் கிடப்பது என்ன நியாயம்?
தங்கள் கட்சிகளிலேயே ஜனநாயகத்தையோ தேர்தல்களையோ முறையாக நடத்தாதவர்கள் நாட்டில் ஜனநாயகத்தை எந்த அளவு மதித்து நடப்பார்கள்?....
தேர்தல் கேள்விகள்....(5)
ஒரு தொகுதியில் இருபது வேட்பாளர்கள் நிற்கிறார்கள்.
அவர்களில் சிலர் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
சிலர் ஜாதிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
மீதி இருப்பவர்கள் சுயேட்சைகள்.....
இவர்கள் யாரும் முன்னர் மக்கள் பனி செய்தவர்களோ மக்களுக்கு அறிமுகம் ஆனவர்களோ அல்ல!
இந்த நிலையில் அவர்கள் அனைவருடைய யோக்கியதாம்சங்களையும் அனைத்து மக்களும் உணர்ந்து அவர்களில் சிறந்த ஒருவரை அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் வழிமுறை என்ன?
கேள்வி எண் : 6
சற்று நேரத்துக்கு முன்னாள் ஒரு நண்பருடன் எனது தனிச் செய்தி உரையாடல்...
----------------------------------------------------------------------------
ஐயா அங்கு தேர்தல்
என்று பிஸியாக இருக்கிறீர்களா?
நான் தேர்தல் குப்பைகளைத் திரும்பிக்கூடப் பார்ப்பது இல்லை.
49 O
What is this 49 O
நீங்க யாருக்கும் ஒட்டு போடவே இல்லையா?ஆச்சிரியமாக இருக்குதுங்க ஐயா. ஆனால் உங்க ஓட்டையும் யாராவது போட்டு விடுவார்கள் அல்லவா?
சமீப காலமாக யாருக்கும் போடுவது இல்லை. எனது ஓட்டை யாராவது போட்டால்கூடக் கவலை இல்லை. காரணம் நான் போட்டாலும் ஒன்றுதான் அவன் போட்டாலும் ஒன்றுதான்....
ஐயா நீங்க போட்ட அட்லீஸ்ட் கொஞ்சம் நல்லவங்களா இருக்கிறவங்களுக்கு கிடைக்கும் வேறு யாராவது போட்டால் கள்ள ஓட்டுதான்
அதெல்லாம் இல்லை சாக்கடையில் நெளியும் புழுவில் எது நல்ல புழு என்று ஆராய்வது என்னுடைய வேலை அல்ல!.
ஐயா அரசியலில் உள்ளவர்களின் மேல் இவ்வளவு கோபமா?
அரசியலில் உள்ளவர்களின்மேல் அல்ல! அதிகாரத்தில் உள்ளவர்களின்மேல்......தேர்தல் முறையின்மேல்......மக்களின் அறியாமையின்மேல்......நாயினும் கீழான படித்த அயோக்கியர்களின் மேல்.....
ஐயா நீங்கள் கோபப்படுவதாக இருந்தால் இந்த மக்களின் மேல் தான் கோபப்படவேண்டும். ஏன்னா அவர்கள் தான் தெரிந்தும் தப்புசெய்யறவங்க. நாம் நினைத்து வருத்தப்படுவதுதான் மிச்சம்.
அதனால் இந்தக் குப்பைத் தேர்தல்களை நான் மதிப்பதில்லை. சிறந்த தேச பக்தர்கள் மதிக்க மாட்டார்கள்!கந்தல் துணியை நாய்கள் கிழிப்பதுபோல் ஜனநாயகத்தைக் கிழித்துக் கொண்டுள்ள நிலையில் அதில் சிறந்த ஒன்றை என்னால் பார்க்க முடியவில்லை.....
தேர்தல் கேள்விகள் ( 7 )........
நல்லவர்களைப் பார்த்து மக்கள் ஒட்டுப்போடுவதில்லை என்று சொல்லும் நண்பர்களே!...
இந்தப் படத்தில் உள்ள நல்லவரை விட யாரைப் பார்க்கமுடியும்?
ஜாதவ் பயங்......எந்த சுயநலமும் இல்லாமல் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் தனிமனிதனாக இருந்து தனது வாழ்வை அர்ப்பணித்துக் காடு வளர்த்தவர்!
இவர் நாட்டின் எந்தத் தொகுதியில் நின்றால் ஜெயிக்க வைப்பீர்கள்? அல்லது டெபாசிட் பணத்துக்கு உறுதி அளிப்பீர்கள்?
தேர்தல் கேள்விகள் ( 8 )
சட்ட விரோதமான நடைமுறை ஏதுமில்லாமல் விதிகளின்படி தேர்தல் நடந்த அல்லது நடக்கும் என்று நம்பக்கூடிய ஏதாவது ஒரு தொகுதியை நாட்டில் சுட்டிக் காட்ட முடியுமா?
முடியாது என்றால் உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயகம் நடக்கும் நாடு என்று சொல்ல என்ன அருகதை இருக்கிறது?....
தேர்தல் கேள்விகள்...( 9 )
நண்பர்களே!
வாக்காளர்களுக்கு அடையாள அட்டை கொடுப்பது என்று வேலை துவங்கி பதினைந்து வருடங்கள் இருக்கலாம்....
ஒவ்வொரு தேர்தலிலும் அடையாள அட்டையில் தவறு இருந்தாலோ காணாமல் போனாலோ இப்படி ஓட்டுப் போடலாம் என்று அறிவிக்கிறார்கள்...
ஆனால் தவறு இல்லாமல் கொடுத்து முடிப்பதற்குள் வாக்காளர்கள் அனைவரும் போய் அடுத்த தலைமுறையினர்தான் இருப்பார்கள்....
அதனால் என்ன பயன்?...
இந்த வாக்காளர் அடையாள அட்டை கொடுப்பதே கள்ள ஓட்டுக்களைத் தடுப்பதற்கே!
அதற்காக ஆயிரக் கணக்கான கோடிகளைக் காலம் பூராவும் செலவு செய்வதற்கு இப்படிச் செய்தால் என்ன?
ஆதாவது கையெழுத்துப் போடத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே ஒட்டு என்று அறிவித்துவிட்டால் என்ன?.....
கையெழுத்தைச் சோதித்தால் போதும் அல்லவா?
அதனால் கள்ள ஓட்டைத் தடுப்பதுமட்டும் அல்ல! வாக்காளர்கள் அனைவரும் கையெழுத்துப் போடத் தெரிந்தவர்கள் ஆவதால் கல்வியின்மை ஒழிக்கப்படும் அல்லவா?....
தேர்தல் கேள்விகள்.....( 10 )
கள்ள ஓட்டுப் போடுவது குற்றம். அதை அனுமதிக்கக் கூடாது! கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்....
எல்லாம் சரி!
கள்ள ஓட்டுக்கும் நல்ல ஓட்டுக்கும் விளைவில் என்ன வேறுபாடு?....
தேர்தல் கேள்விகள் 11.....
நண்பர்களே!
என்னைப் பொருத்தவரை எனக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கும் ஒவ்வொருவரும் தகுதி அற்றவரே!....
ஒருவருடைய சிறப்பான பண்புகளை முன்வைத்து மக்களில் ஒரு பகுதியினர் அவரை விரும்ப வேண்டும்.
அவருடைய சம்மதத்துடன் அவரைப் பிரதிநிதியாகத் தேர்வு செய்யலாம் என்று மற்றவர்களிடமும் விளக்கிச் சொல்லி வாக்குக் கேட்க வேண்டும்.
அப்போதுதான் அவர் சிறப்பான தகுதி உடையவர் ஆகிறார்!.....
ஒரு மிகச் சிறந்த சமூகத் தொண்டர் தன்னைத் தேர்ந்தெடுங்கள் என்று கேட்கக் கூடாது!
மக்கள்தான் அவரைத் தங்களின் பிரதிநிதியாக இருக்கவேண்டும் என்று கேட்டு அன்புக் கட்டளை இடவேண்டும்!....
ஆனால் இங்கோ!.......கொடுமை! கொடுமை!......
தேர்தல் கேள்விகள்....(12)
அரசியலில் எத்தனை தடவை எத்தனைபேரால் ஏமாற்றப்பட்டாலும் துரோகம் செய்யப்பட்டாலும் அதன்பின்னும் ஏமாற்றும் ஆட்களைத்தான் மாற்ற நினைக்கிறார்கள்!
அதைத் தவிர ஏமாற்ற முடியாத நிலைமைக்கு எது சரியான அரசியல் வழி என்று சிந்திப்பவர்களையே காணோம்.
இதே பாதையில் போனால் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் அதிகாரமும் அரசுகளும் நல்லவர்கள் தலைமையில் நடக்காது!
வரலாற்றுப் புகழ்பெற்றவர்களையும் ஊரை அடித்து உலையில் போட்டவர்களையும் பாகுபாடில்லாமல் கோபுரத்திலும் குப்பையிலும் மாறி மாறி எறிந்து வரலாறு படித்ததுதான் இந்திய அரசியல்!
இந்திய அரசியல் என்றும் அறிவு பூர்வமாக இருந்தது இல்லை.
அதனால் இப்போது தேர்தலில் வெற்றி பெறத் துடித்துக்கொண்டு இருப்பவர்களும் புதிதாக முளைத்திருப்பவர்களும் மட்டும் என்ன மாற்று வித்தையை , மந்திரக் கோலைக் கையில் வைத்திருக்கிறார்கள்?....
தேர்தல் கேள்விகள் ( 13 )
தேர்தலுக்குப் பின்னால் மக்கள் நல்லவர்களைத் தேர்வு செய்வதில்லை என்று குறைசொல்லித் தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் நண்பர்களுக்கு....
இதற்கு முன் நடந்த தேர்தல்களில் நீங்கள் ஓட்டுப் போட்டவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று தெரிந்துதான் போட்டீர்களா?
இனிமேலும் அப்படித்தான் போடுவீர்களா?
ஆம் என்றால் நீங்கள் உங்கள் தொகுதில் வாக்களிக்க இருக்கும் நல்லவர் பெயரை ஏன் இப்போது சொல்லக்கூடாது?
முட்டாள்(?) மக்களுக்குப் புத்தி வரவும் நல்லவர்க்கு ஓட்டுப்போட வைக்கவும் நீங்கள் ஏன் வழிகாட்டக் கூடாது/...
தேர்தல் கேள்விகள்....( 14 )
எழுபது வருஷம் ஆகப் போகிறது!....
ஒவ்வொரு தேர்தலிலும் எத்தனையோ கட்சிகளால் எத்தனையோ வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டும் கேட்கப் பட்டும் ஆயிற்று!....
ஆனால் அவை நிறைவேறியதா?.....
இப்போதும் அதே பாட்டுத்தான் ஒலிக்கிறது.
ஒரு கேள்வி!
வாக்குறுதிகொடுப்பவர்களின் தகுதிகளில் அல்லது அதைக் கேட்கும் மக்களின் தகுதிகளில் ஏதேனும் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளதா?.....
இல்லை என்றால் இப்போது மட்டும் என்ன கிழிக்கப் போகிறார்கள்?.....
தேர்தல் கேள்விகள்....( 15 )
கருப்புப் பணத்தை மீட்க முயற்சி...
- தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ்.....
பாவம்!..என்ன ஆச்சு? சுவிஸ் பேங்குல இருந்து காணாமப் போச்சா?.....
எல்லாப் பேர்வழிகளும் ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கணும்னே சொல்றாங்க!
இத்தனை பேரையும் ஏமாத்திட்டு இதைச் செயுறவன் யார்ரா?...
வாடா இங்கே! உனக்கு மாலை போடணும்!....
தேர்தல் கேள்விகள் ( 16 )
இந்தியாவை ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகள் வர்த்தகத்தால் சுரண்டிக் கொள்ளையடித்த ,
ஏறக்குறைய இருநூறு வருடங்கள் நேரடி அதிகாரத்தின்மூலம் நமது தாய்நாட்டை அடிமைப் படுத்திய ,
மாவீரன் பகத் சிங் நண்பர்கள், மற்றும் எண்ணற்றவர்களைத் தூக்கில் ஏற்றிப் படுகொலை செய்த,
ஜாலியன்வாலா பாக் போன்ற படுகொலைகள் நடத்தி எண்ணற்ற தியாகிகளை அழித்தொழித்த,
வ உ சி போன்ற எண்ணற்ற பெரியோர்களை வெஞ்சிறைகளில் கொடுமை செய்த ,
வாஞ்சிநாதன் போன்ற எண்ணற்ற தியாகிகள் தங்கள் இன்னுயிரை இழக்கக் காரணமாக இருந்த,
இந்தியச் சிறைகளிலும் அந்தமான் சிறைகளிலும் அடைத்துக் கூட்டம் கூட்டமாக நமது முன்னோர்களைக் கொன்ற,
வெள்ளைக் காரர்களை விட......
நல்லவர்கள் என்று இப்போது நம்மை ஆண்டுகொண்டிருக்கும் அல்லது ஆள வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் யாரையாவது மக்கள் சொல்வார்களா?......
காரணம் என்ன?
தேர்தல் கேள்விகள்.....17....
தேர்தல் சுனாமி தடுக்க இயலாத வேகத்தில் கற்றைகளால் தாக்கிக்கொண்டு உள்ளது!.....
ஜனநாயகம் நிர்மூலமாக்கப்படுகிறது!....
தப்பிக்க வழி இல்லாமல் மக்கள் திணறிக்கொண்டுள்ளார்கள்....
இப்போது இறைக்கப்பட்ட இறைக்கப்படும் பணம் யாருடையதோ அல்ல!....
மக்களிடம் கொள்ளையடித்த பணமே!....
அது மீண்டும் மக்களிடம் விதைக்கப்படுகிறது...
பின்னாளில் ஒன்றுக்கு நூறாக அறுவடை செய்யப்படும்!...
மக்கள் உணர்வது எப்போது?....
தேர்தல் கேள்விகள் ( 19 )
நாட்டின் எந்தக் கோடியிலாவது ஏதாவது ஒரு பெரிய தவறு நடந்துவிட்டால் சிறு தடையம் கிடைத்தாலும் கையும் களவுமாகப் பிடித்து விட முடிகிறது!....
ஆனால் ஓட்டுக்காக லஞ்சம் கொடுக்கும் பணி (!) யும் முறைகேடுகளும் பல்லாயிரக் கணக்கானவர்களால் பட்டி தொட்டியெல்லாம் சந்து பொந்தெல்லாம் நெட் ஒர்க்காக நடந்தாலும் ஒரு வேட்பாளர்கூடப் பிடிபட்டு முட்டிக்கு முட்டி தட்டபடுவதில்லையே!
அத்தனை பேரும் யோக்கியர்களா?...
இது சம்பந்தப்பட்ட யாருக்குமே தெரியாதா?....
தெருவில் போவோர் வருவோர்தான் அகப்படுகிறார்களா?....
நீதித்துறையில் இருந்து அத்தனை துறைகளும் அறிந்தே நடக்கும் இந்தக் கூத்தை கூச்சனாச்சம் இல்லாமல் எப்படி ஜனநாயகம் என்று அழைக்க முடிகிறது?...
இப்படிப்பட்டவர்களால் அமையும் ஆட்சி எப்படி நல்லாட்சியாக இருக்க முடியும்?...
இதில் ஓட்டுப் போடுவது புனிதக் கடமையாம் .......
தேர்தல் கேள்விகள்.......( 20 )
ஊழல் வண்டி....அல்லது அரசியல் திருடர்கள்
பெரும்பாலான அரசியல் கட்சிகளும் பெரும்பாலான அரசியல் தலைவர்களும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தூய ஆட்சியைத் தருவதாகவும் மக்களின் குறைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பதாகவும் வாக்குறுதி கொடுக்கிறார்கள்...
ஆனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுடைய பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை.
மாறாக வளர்ந்துகொண்டே இருக்கிறது!
ஆள்கின்ற ஆட்களில்தான் மாற்றமே தவிர மக்களுக்கான சேவைகளில் அனைவரும் ஒன்றே!....
ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு விதமான ஆட்களையும் புதுப் புது வாக்குறுதிகளை மட்டும் பார்க்க முடிகிறது....
இதற்கு முடிவே இல்லையா?
இதற்குக் காரணம் என்ன?
இதற்கான காரணங்களை யாராவது சொல்கிறார்களா?...
நன்றாக சிந்தித்துப் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும்!
நமது நாட்டு அரசு நிர்வாக இயந்திரம் ஒரு ஊழல் வண்டி!
அது அனைத்து வகையான தவறுகளும்தான் உள்ளடக்கியது!
மக்களுடைய துன்ப துயரங்களுக்கெல்லாம் யார் காரணமோ அவர்களுக்கு மட்டுமே பயன்படும் வகையில் வடிவமைக்கப் பட்டது.
அதில் உயர்ந்த பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் சேவையையும் சட்டதிட்டங்களின்பால் உண்மையான விசுவாசத்தையும் எதிர்பார்க்க முடியாது!...
அது நல்லவர்களையும் தேசபக்தர்களையும் அவமதிக்கும்! மாறாக கிரிமினல்களை வாழவைக்கும்!
இத்தனை தகுதிகள் உள்ள ஊழல் வண்டியில்தான் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் பயணம் செய்கிறார்கள்.
ஊழல் செய்பவர்களும், அதைப் பயன்படுத்தத் தெரிந்த கயவர்களும், சட்டத்தின் நல்ல அம்சங்களைஎல்லாம் செயலிழக்கவைத்து அதைக் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் மக்கள் விரோதிகளும் மட்டுமே அதில் பயன் அடைபவர்கள் ஆவர்.
அத்தகைய ஊழல் வண்டியில் பயணித்துக்கொண்டே அதில் கிடைக்கும் முறைகேடான ஆதாயங்களை அனுபவித்துக்கொண்டே அதைப் பயன்படுத்தி மக்களுக்கு மகத்தான சாதனைகளைச் செய்யப்போவதாக வாய்கூசாமல் சொல்கிறார்கள்!
அதன்மூலம் கள்ளத்தனமாகப் பயன் அடைபவர்கள் மக்கள் மத்தியில் மாற்றி மாற்றிப் பொய் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது! காரணம் அவர்களின் தர்மம் அது!
ஆனால் காலாகாலத்துக்கும் திருடர்களையும் கொள்ளைக்காரர்களையும் அவர்கள் சொல்லும் பொய்களையும் நம்பி நம்பி ஏமாந்துகொண்டு இருப்பதுதான் மக்களின் கடமையா?....
யாரை நம்புவது என்பதில் ஒரு அளவுகோல் வேண்டாமா?
மேலே சொல்லப்பட்ட நிரந்தரமான அமைப்பான ஊழல் அரசு இயந்திரத்தை அக்கு வேறு ஆணி வேறாகக் கழட்டி அதில் உள்ள தவறான பாகங்களைஎல்லாம் தூக்கி எறிந்து விட்டு ஊழலற்ற மக்களுக்கு உண்மையான சேவை செய்யும் அமைப்பாக மாற்றுகிறோம் என்று யார் சொல்கிறார்களோ அப்படிச் சொல்வதற்கான கோட்பாடுகளையும் செயல் திட்டத்தையும் யார் கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான் நம்பிக்கைக்கு உரியவர்கள்!....
காரணம் இப்போது உள்ள அரசு இயந்திரமும் அதன் விதிகளும் அந்நியர்கள் தங்களுக்கு அடிமைகளாய் நம் தாய்நாடு இருக்கவேண்டும் என்பதற்காகவே உருவாக்கப் பட்டவை!
அவர்கள் இருந்தவரை அவர்களுக்கு விசுவாசமாகச் சேவை செய்ய மட்டும் பயன்பட்டது....
ஆனால் அவர்கள் சென்றபின்னால் அதே அரசு இயந்திரம் நம் சொந்த நாட்டின் சுயநலவாதிகளின் கைக்கருவியாக மாற்றப்பட்டது!
அதில் ஒரே ஒரு பெரும் மாற்றம் மட்டும் செய்யப்பட்டது.
ஆதாவது வெள்ளையன் இருந்த இடத்தில் நமது நாட்டுக் கொள்ளையர்கள் அமர்ந்ததோடு அரசு இயந்திரமும் ஊழல் மயமாக்கப் பட்டது!
அதைக்கொண்டு சுயநலவாதிகளும் நாட்டுப் பற்றற்றவர்களும் அந்நிய விசுவாசிகளும் மட்டுமே பயனடைய முடியும்.
நல்லவர்களும் நாட்டுப் பற்று மிக்கவர்களும் பாடுபடும் சாதாரண மக்களும் ஏழை எளியவர்களும் தன்மானம் இல்லாத வாழ்வு மட்டுமே வாழ முடியும்!....
அப்படிப்பட்ட மோசமான அரசு இயந்திரத்தை மாற்றி அமைப்பதைவிட உயர்ந்த மக்கள் பணி எதுவாக இருக்க முடியும்?....
அப்படி யாராவது திட்டவட்டமான வாக்குறுதியைக் கொடுக்கிறார்களா? அதற்கான அவர்களின் தகுதியைத் தெளிவாக்கி இருக்கிறார்களா?
ஆம் என்றால் அவர்களை நம்பலாம்!
நம்பிப் பின்னால் ஓடுவது அல்ல! அனைவரும் அணிவகுத்து உன்னதமான அரசமைப்பையும் அரசியல் அமைப்பையும் உருவாக்கலாம்.
துரதிருஷ்ட வசமாக அப்படி மிகச் சரியான சக்திகள் நமக்கு முன்னால் இல்லை என்பதே உண்மை!...
Subash Krishnasamy
http://www.drumsoftruth.com/2014/04/60.html
தேர்தல் கேள்விகள் ( 21 )
நல்லவங்களுக்கு ஓட்டுப் போடச் சொல்வோர் சங்கத்துக்கு......
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஓவ்வொருவரும் அடுத்தவர்கள் செய்த தவறுகளையும் ஊழலையும் நார்நாராகக் கிழிக்கிறார்கள்....
அதன்மூலம் அனைவருமே சாக்கடையால் அபிஷேகம் செய்யப்பட்டு விட்டார்கள்...
அனைவருடைய வண்டவாளங்களும் தண்டவாளத்தில் ஏறி நிற்கின்றன!....
அனால் யாரும் தங்கள் கைத்தடிகளைத் தவிர மற்றவர்களால் பாராட்டப்படவில்லை!....
இதுல நல்லவங்க எந்தச் சந்துல இருக்காங்க அப்படின்னு தேடித் பிடிச்சு ஒட்டுப்போடுறது?....
தொகுதிவாரியா ஒரு நல்லவர் பட்டியல் கொடுங்கப்பா!.....
ஒட்டுப்போட நாங்க தயார்! நல்லவங்களைக் காட்ட நீங்க தயாரா?....
தேர்தல் கேள்விகள் ( 22 )
பொய், ஏமாற்று, வஞ்சகம், மோசடி, ஒழுக்கக்கேடு, கொலை, கொள்ளை, நேர்மையின்மை அறியாமை இன்னும் பல.....
இவையெல்லாம் மனிதனுக்குத் தகாத தீய பண்புகள்!...
ஆனால் மக்களால் வெறுக்கப்படும் இத்தனை பண்புகளையும் உள்ளடக்கியதாக விளங்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் அவற்றை அதிகாரத்தில் அமர்த்தும் தேர்தல்களும் அவற்றின்மூலம் அதிகாரத்துக்கு வருபவர்களும் எப்படிச் சிறந்த நல்லாட்சியைத் தரமுடியும்?...
தேர்தல் கேள்விகள்.....(23)
ஓட்டுப் போட ஸ்லிப் கொண்டுவந்து கொடுத்தார்கள்!...
அதன் பின்பக்கம் இப்படி எழுதி இருந்தது...
ஒட்டுப்போடப் பணம் வாங்காதீர்கள்.....
அவமானமாக இருந்தது!......
அப்படியானால் வாக்காளர் ஒவ்வொருவரும் பணம் வாங்குபவர்களா?....
அடுத்த தேர்தலில் கள்ளச் சாராயம் காய்ச்சாதீர்கள் என்று எழுதிக் கொடுத்தாலும் கொடுப்பீர்களா?!....
அடப் பாவிகளா!.....
தேர்தல் கேள்விகள்.....எண்:24
எதிர்க்கட்சிகள் மற்றும் ஆண்ட கட்சிகள் பற்றிய ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றிய பட்டியலைச் சொல்லி ஆளும் கட்சிகள் ஓட்டுக் கேட்கின்றன.
அந்தப் பட்டியலில் உள்ள குற்றச் சாட்டுகள் பொய் என்றால் அப்படிச் சொல்பவர்கள் குற்றவாளிகள் ஆகிறார்கள்!
அவர்கள்மேல் வழக்குத் தொடுக்கலாம்....மான நட்ட ஈடும் கோரலாம்...
ஆனால் அப்படியெல்லாம் நடப்பதில்லை....
ஒருவேளை மானம் முக்கியமான ஒன்றாக இல்லையோ?...
இரண்டாவதாக ஆளும் கட்சிகளைப் பற்றிய ஊழல் பட்டியலாக எதிர்க் கட்சிகளும் பிரச்சாரம் செய்கின்றன...
அவை பொய்யானவை என்றால் அதிகாரத்தில் உள்ள கட்சிகள் தங்களைப் பற்றிச் சொன்ன அவதூறுக்காகவும் தாங்கள் அவர்கள்மேல் சொன்ன குற்றச் சாட்டுகளுகாகவும் உடனே நடவடிக்கை எடுத்துக் குற்றவாளிகளைக் கையும் களவுமாகப் பிடித்து உள்ளே தள்ளலாம்.
திருட்டுச் சொத்துக்களைப் பறிமுதல் செய்யலாம்.....
ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடக்காததன் மர்மம என்ன?
வேறு என்ன?....அனைவரும் ஒரே ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதே!.....
ஆனால் நிச்சயமாக இந்த ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகளைத்தான் தேர்தலில் மக்கள் தேர்வு செய்யப்போகிறார்கள்....
இது மானக்கேடான ஒன்று அல்லவா?
இதைவிட்டு வேறு வழி இல்லை என்பதை நினைத்தால் அவமானமாக இல்லையா?...
இந்த அவமானத்துக்கு வழிசெய்யும் காரியம்தான் தேர்தலா?....
அதில் பங்கேற்று வாக்களிப்பதன்மூலம் ஏமாளிகள் என்று ஒப்புக்கொள்வதுதான் ஜனநாயகமா?
இது என்ன மானம் கெட்ட ஜனநாயகம்!....
தேர்தல் கேள்விகள்..... எண்: 25....
நமது தேர்தல்களில் தங்களின் வேட்பாளர்களாக அனைத்துக் கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள்....
ஆனால் சில விதிவிலக்குகளைத் தவிர எந்தக் கட்சியாவது தாங்கள் நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் மக்களின் பிரதிநிதிகளாகச் செயல்பட முழுத் தகுதி உடையவர்கள் என்று நிரூபிக்க முடியுமா?....
அல்லது சுயேட்சைகள்தான் முழுத் தகுதி உடையவர்கள் யாராவது இருப்பார்களா?.....
இந்த நிலையில் யாரை நல்லவர்கள் என்று எந்தத் தகுதிகளை வைத்துத் தீர்மானிப்பது?.....
No comments:
Post a Comment