சின்னவெங்காயம் சேமிப்பில் புது யுக்தி!.....
நண்பர்களே!
என் ஒன்று விட்ட தம்பி தோட்டத்தில் வெங்காயம் அறுவடை செய்யப்பட்டது.
விலை குறைவாக இருந்ததால் அதை விற்பனை செய்யாமல் பக்குவமாகச் சேமிக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் முன்னோர் சேமித்தபடி பட்டறை போட்டுச் சேமிக்கத் தகுந்த மூங்கில்தட்டிகள், மூங்கில்கள், நிலத்தில் பட்டறை கட்ட பெரும் பாண்டுக் கற்கள் போன்றவை தயார் நிலையில் இல்லாததால் பெரும் செலவு செய்யவேண்டிய நிலை இருந்தது!
ஆனால் அதைத் தவிர்த்து தார்க்காலிகமாகப் புது முறையில் பட்டறைபோட முயற்சி செய்து செய்தும் முடித்தார்கள்.
அதன் முதல்படியாக, வெங்காயத்தை அறுவடை செய்து தாளை அரியாமல் அப்படியே பரவலாக நிலத்திலேயே காயும்படி விடப்பட்டது...
வெங்காயம் வெய்யிலில் காய்ந்தால் தரம் குறையும் என்பதால் பிடுங்கப்பட்ட வெங்காயம் தாள் மேலே இருக்கும்படி அறி அறியாக நிறுத்தியே வைக்கப்பட்டது....
அப்படியே நான்கு நாட்கள் காய விடப்பட்டது. பக்குவமாக வெங்காயம் காயாமல் தாள்மட்டும் காய்ந்துவிட்டது.
சுமார் 300 மூட்டைகள் ஆகக்கூடிய வெங்காயத்தைச் சேமிக்க மூன்று பட்டறைகளாகப் போட முடிவு செய்யப்பட்டது.
பட்டறையின் அடியில் தென்னை ஓலைகள் நீளமாகப் பரப்பப்பட்டது.
சுமார் ஐந்தடி அகலமும் மூன்றடி உயரமும் கொண்ட தாக நீளமான குவியலாக அதன்மேல் நன்கு உலர்த்தப்பட்ட வெங்காயம் கொட்டப்பட்டது.
பார்த்தால் சாலைபோட ஜல்லிக்கற்களை நீளமாகக் கொட்டியதைப்போல் இருக்கும்!
அதன்மேல் வேறு விவசாயிகளின் நிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட காய்ந்த வெங்காயத்தாள் தூவப்பட்டது.
அதன்பின்பு வெங்காயப் பட்டறையைச் சுற்றிலும் தரைமட்டத்தில் தாள்மேல் மண் போட்டு அரை அடி மண் அணைக்கப்பட்டது.
அப்போதுதான் மழைபெய்தால் தரை வழியாகத் தண்ணீர் உள்ளே செல்லாமல் இருக்கும்!
அதன் பின்பு பட்டறைமேல் தென்னந்தடுக்குகளைக் கொண்டு வேயப்பட்டது.
அதன்பின்னால் பட்டறையைச் சுற்றியும் வாய்க்கால் வெட்டி வடிகால் அமைக்கப்பட்டது.
ஆதாவது பட்டறையில் விழும் மழைநீர் வெளியேறுவதற்காக இந்த ஏற்பாடு!....
மெல்லிய கட்டுக் கம்பிகளைக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாகக் கட்டிவிட்டால் காற்றால் பட்டறை பாதிக்கப்படாது!
இப்போது முழுமையான பட்டறை தயார்!....
இந்தமாதிரி மூன்று பட்டறைகள் அமைக்கப்பட்டு சுமார் 300 மூட்டை வெங்காயம் சேமிக்கப்பட்டு உள்ளது.....
No comments:
Post a Comment