கசப்பு இனிப்பாகும் விந்தை!.....
ஓரிரு தடவை பிசுறுகளையும் எச்சிலையும் வெளியே துப்பி விட வேண்டும்.
நண்பர்களே! ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பார்கள்!
அதுபோல பல்லுக்கு நன்மையையும் உறுதியும் சேர்க்கும் மற்றொன்றுதான் வேம்பு!
அதன் குச்சியால் பல்துலக்கும்போது அது பற்களுக்கு உறுதி சேர்ப்பது மட்டுமல்ல சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது!..
ஆனால் அதன் கசப்புச் சுவை காரணமாக அதன் பயனை அறிந்தவர்கூடப் பயன்படுத்துவது இல்லை!
ஆனால் அதன் பயன்பாட்டில் ஒரு நுட்பத்தைப் பயன்படுத்தினால் கசப்புச் சுவையைத் தவிர்த்து திருப்தியாகப் பல் துலக்கலாம்.
ஆதாவது நமது நாக்கின் அனைத்துப் பகுதிகளும் அனைத்துச் சுவைகளையும் உணர்வது இல்லை! ஒவ்வொரு சுவைக்குமான சுவை மொட்டுக்கள் நாக்கின் ஒவ்வொரு பாகத்திலும் அமைந்துள்ளன.
அதன்படி கசப்புச் சுவையை உணரக்கூடிய சுவை மொட்டுக்கள் வாயின் உட்பகுதியில் நாக்கின் பின்பாதியில் அமைந்துள்ளன.
நாம் கசப்பை மெல்லும்போது அந்தச் சுவை மொட்டுக்கள் மூலம் கசப்பை உணர்வதால் வேப்பங்குச்சியால் பல் துலக்குவதை வெறுக்கிறோம்.
ஆனால் அந்தக் கசப்பைச் சிறுதும் அறியாமல் வேப்பங்குச்சியால் சிறப்பாகப் பல்துலக்கலாம்.
ஒரு துண்டு வேப்பங்குச்சியை ஒடித்து அதன் நுனியை முன்பற்களால் நன்றாக மென்று மஞ்சிபோல் ஆக்கவேண்டும்.
அப்போது எந்தக் காரணத்தைக் கொண்டும் குச்சி நுனி நாக்கைத் தாண்டக் கூடாது! அதேபோல கடைவாய்ப் பற்களைப் பயன்படுத்தக் கூடாது.
ஓரிரு தடவை பிசுறுகளையும் எச்சிலையும் வெளியே துப்பி விட வேண்டும்.
இப்போது கசப்பு போயேபோச்சு என்று சொல்லிக்கொண்டே வழக்கம் போல் பல் துலக்கலாம் .
வேப்பங்குச்சி எல்லா இடங்களிலும் கிடைப்பதால் கசப்புத் தெரியாமல் பல்துலக்கப் பழகிக் கொண்டால் தினமும் அருமையாக இயற்கை முறையில் பல் துலக்கலாம்!
அதே நேரம் பல்பொடிக்காகவும் பல்பசைக்காகவும் செலவு செய்யும் பணத்தையும் மிச்சப் படுத்தலாம்....
அதுதான் இனிமை!.....
No comments:
Post a Comment