வருத்தமான ஒரு உரையாடல்....
மதுரையில் நான் மாவட்ட ஆட்சியராக
இருந்தபோது திங்கள்கிழமை மனுநாளில்
மனு வாங்கி முடித்துவிட்டு வெளியில்
வந்தேன்.
கைலி, அழுக்கு சடையோடு 45
வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் என்
எதிரே வந்தார்.
'ஏன் முன்னாடியே வரக் கூடாதா?
கிளம்பும்போது வருகிறீர்களே... நீங்கள் யார்?’
என்று அவரிடம் கேட்டேன்.'அய்யா... நான்
வ.உ.சிதம்பரம்பி ள்ளையின் பேரன். நானும்
என் தம்பியும் கட்டடங்களுக்கு பெயின்ட்
அடிக்கும் வேலை செய்துவருகிறோம் .
சமீபத்தில் ஒரு உயரமான
கட்டடத்துக்கு பெயின்ட் அடிக்கும்போது என்
தம்பி தவறி விழுந்துவிட்டான ்.
இப்போது உடம்பு சரியில்லாமல் இருக்கிறான்.
அவனுக்காக உதவி கேட்டு இங்கே வந்தேன்.
வெளியில் இருக்கும்
காவலாளி என்னை உள்ளே விடாமல்
துரத்தி அடித்தார். அவரை சமாளித்துவிட்டு
வர இவ்வளவு நேரம் ஆகிவிட்டது’
என்று பரிதாபமாகச் சொன்னார்.
நான் அதிர்ந்துபோனேன்
.'உனக்கு இங்கே நிற்கும்
உரிமையை வாங்கிக்கொடுத்த தே என்
பாட்டன்தானடா என்று முகத்தில்
அடித்ததுபோல சொல்ல வேண்டியதுதானே?’
என்று சொல்லி அவரை ஆசுவாசப்படுத்தி
னேன்.
அதன் பிறகு அவருக்கு 50 ஆயிரம் பணம்
கடன் ஏற்பாடு செய்துகொடுத்து உழவர்
உணவகம் தொடங்கச் செய்தேன். வ.உ.சி-யின்
குடும்பமே வக்கீல் குடும்பம்.
வெள்ளைக்காரனுக் கு எதிராக
சுதேசி கப்பல்விட்ட கம்பீரமான வ.உ.சி-
க்கு ஆங்கிலேய அரசு இரட்டை ஆயுள்
தண்டனை விதித்தது. உடம்பு முழுவதும்
சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரைச்
செக்கிழுக்கச் சொல்லி உத்தரவிட்டது.
தேசத்துக்காக செக்கிழுத்தவரின ் பேரன்கள்
பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
சம்பந்தமே இல்லாத யார்
யாரோ பலனை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
- சகாயம் ஐ.ஏ.எஸ்.—(https://www.facebook.com/veeramvelanjamadurai/photos/a.224087264402027.1073741828.223374171140003/457077357769682/?type=1&theater)
இந்தப் பதிவுக்கு நான் கொடுத்த விமர்சனம்:
வ உ சி யின் பேரன்கள் உழைத்து வாழ்வது என்பது வ உ சி க்கு இழுக்கா?
அப்படியானால் அவர்கள் எப்படி வாழவேண்டும் என்று நாம் நினைக்கிறோம்?
இப்போதைய பல ஊழல் தலைவர்களின் வாரிசுகளைப் போலவா?....
இதுதான் சகாயத்தின் குரலா?.....
இது பற்றிய நண்பர்களின் பதில்கள் உண்மையாகவே எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.....
அந்த உரையாடலை அப்படியே தருகிறேன்.......
Kaligounder Pulli நாம் நம் வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு உள்ளோம்.
அவர் தன் சொத்துகளை அப்படி செய்திருந்தால் இப்போது இந்த கேள்விக்கு வாய்ப்பே இருந்திருக்காது அல்லவா?
ஜெய்ஹிந்த்.
October 1 at 8:11pm · Like · 8 · Reply
Subash Krishnasamy அதுதான் தியாகம் நண்பரே! அந்தத் தியாகத்துக்கு இணையாக எதையும் எதிர்பார்க்கக் கூடாது! அப்படி நினைப்பதே தியாகிகளுக்கு மரியாதை அல்ல! மற்ற அனைவரைப் போலவே அவர்களின் வாரிசுகளும் தங்கள் சொந்த முயற்சியால் நன்றாக வாழட்டும்!...
October 1 at 8:14pm · Like · 4 · Reply
Chockalingam Natarajan இந்தியாவின் கவர்னர் ஜெனெரலாக இருந்த ராஜாஜி " நான் இந்த நாட்டுக்கு செய்த தியாகத்திற்கு எனக்கு கிண்டியிலுள்ள ராஜ் பாவனை எழுதிக்கொடுக்க வேண்டும் " என்றார்.
வா உ சி பேரன் மிக சிறு ஊன்று கோலைத் தான் கேட்டார். அவர் உழைத்து உண்டு கொண்டிருக்கிறார். இலவசமாக ஒன்றும் கேட்கவிலலையே !
October 1 at 8:45pm · Unlike · 7 · Reply
Suresh Mutha Dairy உதவி தானே கேட்டனர். பதவி கேக்கவில்லையே " நம்மில் எத்தனை பேர் கடன் வாங்க வங்கிகளுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் அலைந்து கொண்டிருக்கிறோம். சிறு உதவி கூட செய்ய கூடாது என்று சொல்கிறீர்களா ? தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு அந்த உதவி கூட செய்ய கூடாதா ?
October 1 at 9:35pm · Edited · Unlike · 10 · Reply
Kiruthika Paranthaman உடம்பு சரி இல்லாத போது தான் உதவி கேட்டு இருக்கின்றனர்...வ.வு.சி.யின் பேரன் என்று அடைமொழியை விடுத்து உதவி கேட்கும் ஒரு ஏழ்மை குடும்பம் என்று ரீதியில் பார்த்தாலும்,இது நியாயமான கோரிக்கையே....
October 1 at 9:51pm · Unlike · 11 · Reply
Karthik Ero அவர் யார்கிட்டையும் பிச்சை கேட்கலங்க அய்யா,கடன் தானே கேட்டார்,அதுவும் அடிபட்டு முடியாத நிலையில் தானே கேட்டிருக்கார் அதுல என்ன தப்பு இருக்குங்க,இதுவே திரு.சகாயம இருக்கபோக அவருக்கு இந்த உதவியாவது கிடச்சிருக்கு அவரும் இல்லைனா இவங்க நெலமைய கொஞ்சம் நெனச்சுப்பாருங்க,வாவுசி அவர்களின் தியாகம் அவர் வம்சத்த காப்பாத்துது...விடுங்க நல்லது யார்மூல நடந்தா என்னங்க நடந்தா சரிதான்
October 1 at 10:13pm · Edited · Unlike · 8 · Reply
Afzal Noor மேலும் திரு. சகாயம் அவர்கள் ரூ.50,000 கடன் தான் பெற்று கொடுத்துள்ளார். அவர்களும் உணவகம் நடத்தி பிழைப்பை தொடர்கின்றனர்.
October 1 at 10:12pm · Unlike · 12 · Reply
Anbalagan Rajabather அய்யா அது அப்படி இல்லை, ஒரு சுதந்திர போராட்ட தியாகியின் குடும்பத்தை சார்ந்தவர் நேர்மையக உழைக்க நினைப்பவர் இந்த சமுதாயத்தில் சிறப்பாக வாழ முடியவில்லை ஆனால் லஞ்ச லாவண்ய வாதிகள் எப்படி எல்லாம் வாழ்கிறார்கள் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடக இருக்கும்
October 1 at 11:43pm · Unlike · 10 · Reply
Thaniyan Pandian விடுதலை போராட்ட காலத்தில் வீட்டில் இருந்து கொண்டு முதுகை சொரிந்து கொண்டவன் பிள்ளைகள் சிலரும் பலரும் இன்று வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் போது, படித்து பட்டம் பெற்று வக்கீல் தொழில் பார்த்து பெரும் பணக்காரராய் பிழைக்க தெரியாமல் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து செக்கிழுத்து சிறையில் இருந்த மண்ணின் மைந்தரின் பிள்ளைகளுக்கு செய்யாமல் யாருக்கு செய்வது?
ராணுவ வீரின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு அரசு சலுகை தருவது பிச்சை அல்ல. அது நன்றிக் கடன்!
இதுவும் ஒரு நன்றிக் கடன் தான். நாடு தரும் நன்றி மறவாத கடன்.
October 2 at 12:25am · Unlike · 13 · Reply
Mari Muthu K இக்கட்டான சூழலில் என்னை கரைசேர்த்தவன் அதன்பின் ஆற்றோடு போகட்டும், அதுதான் தியாகம். அவனுக்கு கைகொடுக்கும் பொறுப்பெல்லாம் எனக்கில்லை.
October 2 at 7:21am · Unlike · 3 · Reply
Ramanan L R Venkata Sir - you have misunderstood - It is not wrong to work and live but means to live - either a business or a job is necessary - what is wrong is creating that - please understand from right angle
October 2 at 8:59am · Like · Reply
Rajesh Kumar antha v. o .c avarkalaye kadasiyil pitchai edukka vaithavarkal,avar vaarisukalai eppadi paarparkal.AVAR NINAITHU IRUNDHAL VELLAI KARANUKKU THUNAI NINDRU ORU PERIYA RAJANGA VALKAI VALNTHU IRUKKALAM.kadai thengai eduthu valipillaiyarukku udaikkum arasiyal indru
October 2 at 11:54am · Like · 1 · Reply
Puduvayal Seetharaman Venkataraman எனக்கு தெரிந்து நேர்மை நேர்மை என்று கூறுபவர்கள் இப்படி தான் கஷ்டபட வேண்டும் இதற்கு பல பேர் சாட்சி உழைக்காமல் உக்கார்ந்து சாப்பிடுபவர்கள் ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்களுக்கு இப்போது மிகவும் நன்றாக இருக்கிறார்கள்
October 2 at 11:54am · Like · Reply
Subash Krishnasamy அவர் ஒரு குடிமகன் என்கிற முறையில் நியாயமான எதை வேண்டுமானாலும் செய்யட்டும் நண்பர்களே!...அது அவரது கடமை! வ உ சி யை நினைந்து செய்வதுதான் சரியல்ல என்கிறேன்! அப்படியொரு தியாகியின் வாரிசாக இல்லாதவர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தால் அதுதான் பாராபட்சமற்றது! தியாகியின் தியாகத்தைக் கொச்சைப் படுத்தக்கூடாது என்பதே எனது கருத்து!....
October 2 at 12:12pm · Edited · Like · 3 · Reply
Subash Krishnasamy காந்தியின் வாரிசு காந்தியைப் போல் இருப்பார் என்பது நிச்சயம் அல்ல! அதே போல சாதாரண மனிதனின் வாரிசு உயர்ந்த தியாகியாக ஆகக் கூடாது என்பதும் இல்லை! அப்படி இருக்க தியாகியின் வாரிசு என்பது மட்டும் எப்படி ஒரு தகுதியாக முடியும்?...
October 2 at 12:09pm · Like · 1 · Reply
Puduvayal Seetharaman Venkataraman ஒருவரை போல இன்னோருவர் எதிர் பார்க்க கூடாது அதே சமயம் நாட்டை பற்றி நினைக்காமல் வீட்டை பற்றி நினைத்தால் இன்று நாங்கள் கஷ்டப்பட வேண்டியது இல்லை இப்போது அரசு ஊழியர் இறந்தால் வாரிசு வேலை இது எதற்கு இந்த அரசாங்கம் கொண்டு வர பாடுபட்டவர் குடும்பம் இப்படி கஷ்டபடவேண்டுமா ?
October 2 at 12:16pm · Like · 1 · Reply
Kaligounder Pulli ஐயா ஏதோ உட்கருத்துக்காக பேசுகிறார் போலும்.
எல்லோராலும் தியாகம் செய்ய முடியாது.
அந்த செம்மலுக்கு வாழ்த்து சொல்லமுடிந்தால் சொல்வோம் இல்லையெனில் அமைதி காப்போம்.
October 2 at 12:28pm · Edited · Like · 1 · Reply
Subash Krishnasamy தியாகிகளின் வாரிசுகள் கஷ்டப்படவேண்டும் , நல்லவர்களின் வாரிசுகள் கஷ்டப்படவேண்டும் என்பதுதான் இந்தப் பதிவு சொல்லும் செய்தியா?...இந்த மனப்பான்மைதான் இன்று நாட்டை தவறான பாதையில் செல்ல வைக்கிறது என்று நினைக்கிறேன்.
October 2 at 12:28pm · Like · 1 · Reply
Subash Krishnasamy அந்தமான் சிறையில் உயிரை விட்ட தியாகிகளின் வாரிசுகள் யாரென்று நமக்குத் தெரியுமா? ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிர் விட்டவர்களின் வாரிசுகள் யாரென்று நமக்குத் தெரியுமா? அந்த தியாகிகளின் தியாகத்துக்கு நன்றிக் கடனாக நாம் எதைச் செய்தோம்?....தியாகிகளுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன் என்பது அவர்களின் லட்சியங்களை கடைப்பிடித்து நாட்டு மக்களுக்காக நமது கடமையைச் செய்வதே! பாரபட்சமற்ற நல்வாழ்வு அனைத்து மக்களுக்கும் கிடைக்கப் போராடுவதே!.....
October 2 at 12:32pm · Like · 1 · Reply
Kaligounder Pulli இதை எல்லாம் கண்டு வெளிபடுத்த தகுதியானவர் நீங்கள் தான் ஐயா. அதற்காக முன்கூட்டியே வாழ்த்துக்கள்.
October 2 at 12:34pm · Like · 1 · Reply
Subash Krishnasamy வஞ்சப் புகழ்ச்சியைவிட உண்மையை உணர்ந்தால் அதுதான் மேலானது நண்பரே!.....
October 2 at 12:36pm · Like · Reply
ரவி செண்பகம் தியாகியின் தியாகத்தைக் கொச்சைப் படுத்தக்கூடாது
October 2 at 12:59pm · Unlike · 1 · Reply
Nc Srin சகாயம் போன்று சிலர் இருப்பதால் தான் இன்று கொஞ்சம் மழை பெய்கிறது!
October 2 at 1:02pm · Like · 1 · Reply
Shiva Kumar சகாயம் சொல்லவருவது இந்த நாட்டிக்காக தியாகம் செய்த வாரிசுகள் கூட வறுமையிலும் ,வந்தேறிகள் அதிகாரத்திலும் இருக்கும் அவலத்தை உணர்த்தவே . இந்த நாட்டின் அரசியல் விமர்சனம் .வாரிசுகள் சுயமாக முன்னேறனும் அரசு உதவியை நாடி அந்த தியாகிக்கு செய்யும் அவமானம் என்று பதியும் நீங்கள் எத்தனை அரசியல் திருடர்களை விமர்சனம் செய்து இங்கே பதிவு செய்து இருப்பிங்க என்றல் சுழியமே பதில்
October 2 at 3:00pm · Edited · Like · 2 · Reply
Subash Krishnasamy சகாயம் சொல்லவருவது இந்த நாட்டிக்காக தியாகம் செய்த வாரிசுகள் கூட வறுமையிலும் .......\\\\\\\நல்ல விளக்கம்!....
October 2 at 2:59pm · Like · 3 · Reply
Subash Krishnasamy எத்தனை அரசியல் திருடர்களை விமர்சனம் செய்து இங்கே பதிவு செய்து இருப்பிங்க என்றல் சுழியமே பதில் \\\\\\\\\நீங்கள் எனது விமர்சனங்களைப் படித்தது இல்லை என்பது தெரிகிறது! முதலில் படிக்க முயற்சி செய்யுங்கள்! அது வரை உங்கள் சுழியம் அல்லது உங்கள் நூறுக்கு அர்த்தம் இல்லை!.....
October 2 at 3:36pm · Like · 3 · Reply
Subash Krishnasamy நான் யாரையும் தரங்கெட்டு வசை பாடுவது இல்லை! தவறான அரசியலைப் பற்றி நான் மிக அதிகமாகவே பதிவுகளில் விமர்சனம் செய்திருக்கிறேன். அது திருடர்களை மட்டும் தாக்கும் . படிக்க விரும்பினால் இணைப்பைக் கொடுக்கிறேன்.
October 2 at 3:39pm · Like · 2 · Reply
Subash Krishnasamy திருடர்களின் பெயர் சொல்லுவதையே நல்ல அரசியலுக்கு அவமானம் என்பதால் பெரும்பாலும் பெயர் குிறிப்ப்டுவதைத் தவிர்க்கிறேன்....பெயர் குறிப்பிடாமல் முடியாது என்கிற இடங்களில் மட்டும் அபூர்வமாகப் பெயர் குறிப்பிடுவேன்...அதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றால் சுழியத்தை விட்டு வெளியே வாருங்கள்!....
October 2 at 3:43pm · Like · 2 · Reply
Shiva Kumar எனது ஒட்டுரிமையைப் பயன்படுத்திவிட்டேன்..// பதிவை பார்த்தேன் அந்த ஒரு பதிவே போதும் ஐயா உங்கள் என்னத்தை அறிந்துகொள்ள அறிய பிள்ளை பொறுத்தருளவும் ஐயா
October 2 at 3:49pm · Unlike · 3 · Reply
Subash Krishnasamy Shiva Kumar\\\\\ பிழை ஒன்றும் இல்லை நண்பரே! அரசியலில் நாம் எதிர்பார்க்கும் நியாயமான தீவிரத்தன்மை இல்லாத நிலையில் சில நேரங்களில் இப்படித் தவறாக விமர்சிப்பது இயல்பே! வாழ்த்துக்கள்!
October 2 at 4:03pm · Like · 3 · Reply
Natarajan Anandan GOOD. NO ONE IS THERE TO SEE EVERY ONE'S CONSTRAINTS. ALL BECAME AS SELFISH TO SEE THEIR OWN'S LIFE. VERY PATHETIC. WHEN INDIA WILL HAVE GOOD PEOPLES TO THINK ABOUT ALL ?
October 2 at 7:55pm · Unlike · 1 · Reply
Prakash Dan vaimaye vellum
October 2 at 10:34pm · Unlike · 1 · Reply
Rajesh Krishnakumar · 2 mutual friends
Boss this is India
October 2 at 11:10pm · Unlike · 1 · Reply
Rajesh Krishnakumar · 2 mutual friends
They always support only wrong person
October 2 at 11:11pm · Unlike · 1 · Reply
Rajesh Krishnakumar · 2 mutual friends
wait n see
October 2 at 11:11pm · Like · Reply
இளவேனில் சௌ ஐயா… சகாயம் குரலில் நீங்களே பேசுவது எவ்வகை நியாயம்… வ உ சி பேரங்களின் நிலையையும் தற்போதைய அரசியல்வாதிகளின் பிள்ளைகளையும் ஒப்பிட்டுப் பார்பது குற்றமா?
இத்தனைக்கும் தம்பி உடல் நலிவுற்ற காரணத்தினால் உதவி வேண்டி விண்ணப்பம் செய்ய வந்திருந்தது போல அந்தப் பதிவு வழியே தெரிகிறது… மேலும் அவர்கள் உழைக்க மாட்டோம், ஊதியம் கொடுங்கள் என்று கேட்டதாகத் தெரியவில்லை... கடனே கிடைக்கப் பெற்றிருக்கிறார்கள். அதுவும் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்தாரா, அரசு திட்டத்தின் வழியே செய்தாரா என்பதும் தெரியவில்லை. அரசு திட்டத்தின் வழியே கடன் ஏற்பாடு செய்தாலும் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஊடகத்தார் ஒன்றும் இல்லாத விடயங்களுக்கு கை கால் மூக்கு வைத்து அழகு பார்ப்பது போல இருக்கிறது..
October 2 at 11:15pm · Unlike · 3 · Reply
Santhavel Kpm வ,உ.சி சிறைக்குச்சென்றவுடன் அந்த கப்பலை ஆங்கிலேயரிடமே விற்றவர்கள்.......அப்பவே அப்படி நாட்டுப்பற்று இல்லாதவர்கள் இருந்திருக்கிறார்கள்.இப்ப சொல்லவவும் வேண்டுமா??ஐயா
Yesterday at 9:46am · Unlike · 2 · Reply
Subash Krishnasamy இளவேனில் சௌ\\\\\\\\\நண்பரே! வ உ சி அவர்களின் பேரன் என்பதற்காக அவருக்கு உதவி செய்ததைத் தவறு என்று நான் சொல்லவில்லையே!....ஒரு மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர் நியாயமான உதவி செய்யக் கடமைப் பட்டவர்! அந்த முறையில்தான் செய்திருக்க வேண்டும். வ உ சி யின் பேரன் என்பதற்காக மட்டும் முன்னுரிமை கொடுப்பது அந்த தியாகிகளுக்கும் இப்போதும் வாழும் நேர்மையாளர்களுக்கும் ஒரு மாவட்ட ஆட்சியாளர் என்ற முறையில் அனைத்து மக்களுக்கும் கொடுக்கும் மரியாதையோ கடமையோ அல்ல என்கிறேன்! வ உ சியை நினைக்காமல் செய்திருந்தால் , அதுவும் வ உ சி யின் பேரன் பெயிண்டர் வேலை செய்வதா என்று சொல்லாமல் இருந்திருந்தால் இந்த விமர்சனத்துக்கு அவசியம் இல்லை! நான் சகாயத்தின் நேர்மையை குறை சொல்ல வில்லை!....தியாகிகளின் வாரிசுகள் என்பதை மற்றவர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பைப் பெரும் சலுகையாகப் பயன்படுத்துவதையே தவறு என்கிறேன். நான் சொல்ல வந்ததைச் சரியான கண்ணோட்டத்தில் சீர்தூக்கிப் பார்த்தால் அதில் உள்ள சத்தியமும் நேர்மையும் விளங்கும்.
Yesterday at 11:48am · Like · 3 · Reply
Subash Krishnasamy எனது கருத்தைப் பார்த்தால் சகாயம் அவர்களே ஏற்றுக் கொள்வார் என்றே நான் நினைக்கிறேன்! காரணம் அவர் நேர்மையானவர்! தவறுகளை எதிர்த்துப் போராடுபவர் மட்டுமல்ல . நியாயமான விமர்சனங்களை ஒப்புக் கொள்பவரும்கூட!.
Yesterday at 12:01pm · Like · 1 · Reply
Afzal Noor அய்யா,
நாட்டிற்காக எங்கள் பாட்டனார் உழைத்தார்.
தலைமுறை தாண்டியும் அதனை அங்கீகரிக்க நாடு என்றும் தயாராகவே உள்ளது என்று இந்த சம்பவம் மற்றவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்பது எனது மற்றொரு பார்வை.
Yesterday at 12:10pm · Like · 1 · Reply
Subash Krishnasamy நல்லது நண்பரே! இது மொய்க் கலாச்சாரம்! தியாகம் செய்தவர்களுக்கு செய்த தியாகத்தைப் பொருத்து பதில் மரியாதை அவர்களின் வாரிசுகளுக்குக் கிடைக்கும்!....மொய்க்கு மொய்! அப்படிப்பட்ட மொய் வைக்காதவர்களின் வாரிசுகளின் நிலை என்ன?....
Yesterday at 12:18pm · Like · 2 · Reply
Subash Krishnasamy நிச்சயம் தியாகிகள் தங்களின் தியாகத்துக்கு விலையாக அடுத்து வரும் காலத்தில் அனைத்து மக்களின் சுபிட்சத்தைத் தான் நினைத்தார்களே தவிர அவர்களின் வாரிசுகளுக்கு தனிச் சலுகையை அல்ல!
Yesterday at 12:20pm · Like · 2 · Reply
Subash Krishnasamy இதே நிலையில் இந்த உதவி கேட்டு ஒரு சாதாரணக் குடிமகன் வந்திருந்தாலும் இந்த உதவி கிடைத்திருக்குமென்றால் அதுதான் நமது விடுதலைக்காகப் போராடிய தியாகிகளுக்குக் கிடைத்த மாபெரும் மரியாதை!...அதைப் புரிந்துகொள்ள மறுப்பதுதான் வருத்தமாக இருக்கிறது!....
Yesterday at 12:24pm · Like · 2 · Reply
Sethupathy Swaminathan அய்யா, நாட்டிற்காக பல தலைவர்கள் போராடி தியாகம் செய்திருக்கிறார்கள். பெரும்பாண்மையானவர்கள் தாங்கள் கடுமையாக போராடினாலும் தங்கள் குடும்பத்துக்கு பெரிய கஷ்டங்களை கொடுத்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் தங்கள் சொத்துக்களுக்கு எந்த பாதகமும் வராமல் தங்களது அர்ப...See More
Yesterday at 12:38pm · Edited · Unlike · 1 · Reply
Subash Krishnasamy Sethupathy Swaminathan\\\\\நிச்சயம் நியாயம் நண்பரே! நண்பர்களின் நியாய உணர்வுகளுக்கு நான் எதிரானவன் அல்ல!....அத்தகைய தியாகிகளின் வாரிசுகளாக இல்லாவிட்டாலும் அத்தகைய துன்பத்தில் இருக்கும் ஒரு குடிமகனுக்கு அத்தகைய உதவி கிடைக்கவேண்டும் என்பது தவறா? நான் அனைத்து மக்களுக்கும் அத்தகைய வாய்ப்பு வேண்டும் என்று சொல்வது எப்படி தியாகிகளுக்கு எதிரான ஒன்றாகும்? தியாகிகள் அனைத்து மக்களுக்காகவும் போராடினார்கள்! தியாகிகளின் குடும்பங்களுக்கும் வாரிசுகளுக்கும் எந்த வகையில் அரசுகள் உதவ வேண்டியது சரியோ அதைச் செய்யவேண்டும். அதை யாரும் மறுக்கவில்லையே!....ஒருக்கால் வ உ சி யின் பேரர் சகாயத்திடம் உதவிகேட்டு வராமல் போயிருந்தாலும் அவருக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். காரணம் தியாகிகளின் அடுத்தடுத்த தலைமுறையினரின் துன்பங்களுக்கு முன்னோர் செய்த தியாகம் காரணமாக இருக்கக் கூடாது என்பது இந்த சமூகத்தின் மற்றும் அரசுகளின் கடமை!
Yesterday at 12:56pm · Like · 2 · Reply
Subash Krishnasamy அன்று சகாயம் அவர்களிடம் வேறு சிலரும் இதைவிடக் கொடூரமான பாதிப்பில் இருப்பவர்கள் உதவி கேட்டு வந்திருந்தால் அவர் என்ன செய்திருப்பார்? தியாகிகளின் வாரிசுகள் அல்ல என்பதால் மறுத்திருப்பாரா? நிச்சயம் பாரபட்சமில்லாமல் செய்திருப்பார் என்றே நினைக்கிறேன்!
Yesterday at 1:03pm · Like · 2 · Reply
Subash Krishnasamy அத்தகைய கண்ணோட்டத்தில் அவர் செய்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன்....
Yesterday at 1:05pm · Like · Reply
Sethupathy Swaminathan நண்பர் ஒருவர் கப்பல் கம்பெனியை அவரது குடும்பம் வெள்ளைக்காரர்களுக்கு விற்றதாக கமெண்டில் கூறியிருக்கிறார்... வ.உ.சி அவர்கள் தன்னுடைய உப்பளத்தை விற்ற பிறகும் அவரிடம் கப்பல் கம்பெனி ஆரம்பிக்கும் அளவுக்கு பொருள் இல்லை, ஆகவே பல்வேறு நபர்களை கூட்டாக சேர்க்கிறார். அவர் சிறை சென்ற பிறகு குடுப்ப சூழ்நிலை காரணமாக அவருடைய சகோதரர் மனநிலை பாதிக்கப் பட்டவராகிறார். இந்த சூழ்நிலையில் பங்க்குதாரர்கள் கூறும்போது, கம்பெனியை வெள்ளைக்காரனுக்கு விற்று தானே ஆக வேண்டும். மேலும் அப்போது ஆங்கிலேயர், பிரன்சுக்காரர்கள் தவிர இந்தியர் எவரும் கப்பல் கம்பெனியை வாங்க தயாராக இருந்திருக்க மாட்டார்கள்.
Yesterday at 2:46pm · Unlike · 1 · Reply
Subash Krishnasamy அதுதான் அன்றைய யதார்த்த நிலை!....
Yesterday at 2:49pm · Like · 1 · Reply
Ramanan L R Venkata I feel we need not judge or comment about things which happened when we were not there - VOC's family can not and need not suffer is a simple gesture of courtesy to that great man - I do not see any meaning in discussing this in length and breadth which I feel is discourtesy to great VOC - excuse me if I am little straight forward..
20 hrs · Like · Reply
Subash Krishnasamy அந்த மகத்தான மனிதைரின் புகழுக்குப் பெருமை சேர்ப்பதாகத்தான் அனைவருடைய கருத்துக்களும் உள்ளன நண்பரே!...அவர் இங்கு விவாதப் பொருள் அல்ல! சகாயம் அவர்களின் உதவி பற்றிய வேறுபட்ட பார்வைகளே!.... யாரும் கண்ணியக் குறைவாக எதுவும் சொல்லாத நிலையில் அது பற்றிக் குறை சொல்ல ஒன்றும் இல்லை!
20 hrs · Like · 1 · Reply
Subash Krishnasamy சகாயம் அவர்கள் செய்த ஒரு உதவி பற்றிய விமர்சனத்தையே ஒப்புக்கொள்ள முடியவில்லை என்றால் இன்னும் பல மகான்களைப் பற்றியெல்லாம் விமர்சனம் செய்யவோ சரியான விமர்சனத்தைக்கூட ஏற்றுக் கொள்ளவோ யார் துணியப் போகிறார்கள்? காரணம் விமர்சனம் என்பது பற்றிய சரியான புரிதல் இல்லாமையே!....விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை என்பதை உணர்ந்தால் மட்டுமே நமது உணர்வுகள் சமூகத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும்!.....
19 hrs · Like · 1 · Reply
Praba Haran Subash Krishnasamy அய்யா: சகாயம் அவர்கள் அந்த நபர் வ.உ.சி அவர்கள் பேரன் இல்லை என்றாலும் முடிந்த உதவி அல்லது இத உதவி தான் செய்வார்.
19 hrs · Unlike · 1 · Reply
Subash Krishnasamy நானும் இதை மேலே சொல்லியிருக்கிறேன் நண்பரே!...(அன்று சகாயம் அவர்களிடம் வேறு சிலரும் இதைவிடக் கொடூரமான பாதிப்பில் இருப்பவர்கள் உதவி கேட்டு வந்திருந்தால் அவர் என்ன செய்திருப்பார்? தியாகிகளின் வாரிசுகள் அல்ல என்பதால் மறுத்திருப்பாரா? நிச்சயம் பாரபட்சமில்லாமல் செய்திருப்பார் என்றே நினைக்கிறேன்!)
19 hrs · Like · 3 · Reply
Santhavel Kpm நண்பர் ஒருவர் கப்பல் கம்பெனியை அவரது குடும்பம் வெள்ளைக்காரர்களுக்கு விற்றதாக கமெண்டில் கூறியிருக்கிறார்...///////இப்படி நான் கூறவில்லை ஐயா.நன்றாக என் பிண்ணூட்டத்தை கவனியுங்கள்.....அதாவது,சுதேசி கப்பலை ஆரம்பித்தவுடன் வியாபாரிகளை ஒன்று கூட்டி வியாபாரத்திற்கு சுதேசி கப்பலை பயன்படுத்துமாறு கூறுகிறார் ...அப்படியே சில காலம் சென்றது...ஆங்கிலேயரால் சிறைக்குச்சென்றவுடன் வியாபாரிகள் சேர்ந்து அந்த கப்பல் கம்பெனியை நடத்தாமல் ஆங்கிலேயரிடமே விற்றார்கள் தேசப்பற்றில்லாதவர்கள் என்ற பொருளில்தான் நான் அவ்வாறு குறிப்பிட்டேன்.மேலும் நண்பர் சொல்லித்தான் அவரின் குடும்பமே விற்பதற்கான சூழலில் தள்ளப்பட்டதை அறிகிறேன்..
17 hrs · Edited · Unlike · 1 · Reply
Santhavel Kpm திரு சுபாஷ் ஐயா சொல்வதை நான் முற்றிலும் மறுக்கிறேன்.காரணம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் அனைவருக்கும் செய்யவேண்டியது ஆட்சியரின் கடமைதான் அதில் சந்தேகமில்லை ஐயா.ஆனால் உதவிகேட்டு வருபவர்களில் உண்மையாக ஏழ்மையில் வருபவர்கள் உண்மையாணவர்கள் என்பதை பகுத்தரிந்து உதவி செய்வதற்கான சுழல் இந்த காலகட்டத்தில் இல்லை ஐயா.வருபவர்களில் வசதியானவர்கள் கூட உதவிகள் கேட்டு வருகிறார்கள். வ.உ.சி. வாரிசுகள் என்ற அடையாளம் நேர்மைக்கான அடையாளம் அதைவைத்தும் அண்ணாரின் தன்னலமற்ற தொண்டிற்கும் ,அந்த குடும்பத்திற்கு செய்யவேண்டிய உதவிகள் செய்தார்.
17 hrs · Like · 2 · Reply
Santhavel Kpm தாங்கள் கூறியது மாதிரி மற்றவர்களுக்கு செய்வாரா??என்றால்....உண்மையான முகவர் அதாவது உண்மையாகவே ஏழ்மை நிலையில் இருப்பவர் என்பது ஊர்ஜிதம் ஆகும் அளவிற்கு நபரின் நேர்மையை அறிந்திருந்தால் நிச்சயம் செய்வார் ஐயா.தற்போதுள்ள நிலையில் பணக்காரர்களும் கட்சிக்காரர்களும் தான் அரசின் உதவியை பெற பலபேர் ஆட்சியரிடம் வருகிறார்கள் .எனவேதான் எல்லாருக்கும் கிடைக்காத சூழல்.மற்றபடி உண்மையானவர்களூக்கும்,நேர்மையானவர்களுக்கும் (இது நபரைபற்றி தெரிந்திருந்தால்)நிச்சய்மாக உதவிகள் செய்வார் அப்படிபட்டவர்களுக்கும் என்பது என் கருத்து ஐயா.தங்கள் பதிவில் உள்ள முரண்களை களைவது உங்கள் பொறுப்பு ஐயா.
17 hrs · Edited · Like · 2 · Reply
Mathi Vanan சிதம்பரனாரின் வாரிசுகள் கொள்ளையடிக்கவில்லை என்பது நல்ல விஷயம்.. ஆனால், போராளி ஒருவரின் வாரிசுகளை சமூகம் கவனிக்கவில்லை என்றால், வேறு யாரைத்தான் கவனிக்கப் போகிறது?
15 hrs · Like · 2 · Reply
Shivaraj Shivaraman /தியாகிகள் தங்களின் தியாகத்துக்கு விலையாக அடுத்து வரும் காலத்தில் அனைத்து மக்களின் சுபிட்சத்தைத் தான் நினைத்தார்களே தவிர அவர்களின் வாரிசுகளுக்கு தனிச் சலுகையை அல்ல/
நன்றி அண்ணா,
இதுதான் தாங்கள் சொல்ல விரும்பிய செய்தி.
சிதம்பரம் ஐயா இன்று இருந்திருந்தால், இச்சலுகையை துச்சமென தூக்கி எறிந்திருப்பார்.
திரு.சகாயம் அவர்கள் யாராயிருந்தாலும் உதவியிருப்பார், எனினும் இந்நார் பேரன் என்றவுடன் திடுக்கிட்டு வெளிப்படுத்திவிட்டார்.
நண்பர்களின் ஆதங்கமும் நியாயமானதே... லொச்சா பசங்க பிள்ளைகளும், பேரன்களும் ஆயிரம் கார்கள் புடைசூழ வலம் வருவதை காணும் எந்த இந்தியனுக்கும், இச்செய்தி வலிக்கும், மிக வலிக்கும்.
இருப்பினும், தாங்கள் கூற விரும்பிய செய்தி மிகச்சரியானது.
13 hrs · Unlike · 3 · Reply
Subash Krishnasamy புரிதலில் எவ்வளவு கோளாறு இருக்கிறது என்பதை உணர இந்தப் பதிவு எனக்குப் பயன்பட்டது தம்பி!....நான் என்ன சொல்கிறேன் என்பதைச் சரியாகப் புரியாமல் அல்லது எடுத்துக்கொள்ளாமல் நான் நினைக்காத பலவற்றுக்கெல்லாம் என்னைப் பிரதிநிதியாக்கிப் பதிலும் சொல்லி விட்டார்கள்!....அவர்களை நினைத்து வருத்தப் படுவதைத் தவிர வேறு வழி இல்லை!
1 hr · Edited · Like · 1 · Reply
Subash Krishnasamy ஆக வ உ சி க்கும் அவரது வாரிசுகளுக்கும் சகாயத்துக்கும்கூட நான் மற்றவர்களைவிட வேண்டாதவன்போலும்!.....கொடுமை!
1 hr · Like · 1 · Reply
Subash Krishnasamy வ உ சியைப் பற்றியும் நேத்தாஜியைப் பற்றியும் எனக்கு சில எதிர்மறை விமர்சனங்க்ளும் உண்டு. அதைச் சொன்னால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன்! துதிபாடும் கலாசாரத்தில் வாழும் நமக்கு விமர்சனத்தின் பொருள் தவறாகப் படுவது இயல்பே!.....
1 hr · Edited · Like · 1 · Reply
Arumugam Chennimalai ///////////அதன் பிறகு அவருக்கு 50 ஆயிரம் பணம்
கடன் ஏற்பாடு செய்துகொடுத்து உழவர்
உணவகம் தொடங்கச் செய்தேன்.//////////// Mr.Sahayam has not given then free money.he just arranged a Loan.
1 hr · Like · Reply
Subash Krishnasamy இதையும் பாருங்கள்!....இதில் வரும் சங்கரன்தான் இந்த உரையாடலில் அடிபடும் உதவி பெற்றவர் ஆவார்! இந்தக் கட்டுரை 2008 ம் ஆண்டு எழுதப்பட்டது. அப்படியானால் சகாயம் அவர்கள் செய்த உதவி என்ன ஆயிற்று? இப்பொது அவர்களின் நிலை என்ன? http://manuneedhi.blogspot.in/2008/08/blog-post_24.html
தமிழன்: தெருவோரத்தில் அனாதைகளாக வ.உ.சி.யின்...
MANUNEEDHI.BLOGSPOT.COM
1 hr · Edited · Like · Reply · Remove Preview
பாலசுப்பிரமணியன் கே கியூபாவின் தொழில்துறை அமைச்சராக இருந்த,,,சேகுவாரா,,, தினசரி கப்பற்தளத்துக்கு சென்று மூட்டை இறக்கும் வேலையை சிலமணிநேரம் ஈடுபடுவாராம் அதேபோல் வயலில் கரும்பு வெட்டும் வேலையும் செய்த பின்னரே தனது அமைச்சருக்கான வேலையை பார்ப்பாராம்
இதையெல்லாம் கண்ட நண்பர்கள் நீங்கள் “இதைச் செய்துதான் ஆகவேண்டுமா?” என்று கேட்டபோது சேகுவாரா சொன்னபதில்,,,
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உடல் உழைப்பு என்பது கட்டயாமாக இருக்க வேண்டும் என்றாராம்,,,
இந்தியாவிலோ உடல உழைப்பு கேவலமானது என்ற மனநிலையே ,,,பலருக்கும் உள்ளது,,
அதன ஒருவகையான வெளிப்பாடுதான் சகாயம் கூறிய பெயிண்ட் அடிப்பதை பற்றிய கருத்தும்,,,
1 hr · Unlike · 1 · Reply
Subash Krishnasamy வ உ சிக்கு ஆணும் பெண்ணுமாக மொத்தம் எட்டுப் பிள்ளைகள். இந்த மூவரும் மூத்தமகன் வழியாக வந்த கொள்ளுப் பேரன் பேத்திகள்....அப்படியானால் மற்ற வர்களின் வழி வந்த பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன் பேத்திகள், எள்ளுப் பேரன் பேத்திகள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு நூறு பேர் வரை இருக்க வாய்ப்பு உள்ளது! அவர்களெல்லாம் இன்று எப்படி இருக்கிறார்கள் என்று யாருக்குத் தெரியும்?.....
1 hr · Like · Reply
Subash Krishnasamy பாலசுப்பிரமணியன் கே\\\\\\\\அருமையாகச் சொன்னீர்கள்! அதுதான் இந்த உரையாடலின் மையக் கருவே!....
58 mins · Like · Reply
P Muni Yandi சகாயம் அவர்கள் சொல்வதில் தவறொன்றும் இல்லை.அவர் இந்த நன்றி மறந்த சமூகத்தையும், அரசையும் சாடுவதாகத்தான் நினைக்கத் தோன்றுகிறது. நமக்காக வாழ்ந்து அழிந்தவரின் வாரிசுகளுக்கு உயர்ந்த கல்வியை வழங்கி வாழ்க்கைத்தரத்தை உயர்த்தாதது சாடுதலுக்கு உரியதுதானே?
53 mins · Like · Reply
Subash Krishnasamy சாடுவது சரி!....ஆனால் சாடுகிறேன் பேர்வழி என்று வேலை செய்து பிழைக்கும் மற்றவர்களை மனம் நோகச் செய்யலாமா?.....வ உ சியின் மற்ற ஏராளமான வாரிசுகளைப் பற்றி அவர் அறிவாரா?...நாம்தான் அறிவோமா?...நமது கோபமும் வருத்தமும் சகாயம் அவர்களின்மேல் அல்ல! அவர் போன்ற நல்லவரே அப்படிச் சொல்லுமளவு நாடு இருக்கும் இழிவான நிலைமைதான்!....
44 mins · Like · 1 · Reply
P Muni Yandi வ உ சியின் மற்ற ஏராளமான வாரிசுகளைப் பற்றி அவர் அறிவாரா?/// பதம் பார்க்க ஒரு சோறு போதுமே?
26 mins · Like · Reply
Subash Krishnasamy Santhavel Kpm தங்கள் பதிவில் உள்ள முரண்களை களைவது உங்கள் பொறுப்பு ஐயா. \\\\\\\\எனது கருத்தில் என்ன முரண்பாடு என்று கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறீர்களா நண்பரே? வ உ சி அவர்களையும் அவருடைய வாரிசுகளையும் சகாயம் அவர்களையும் பற்றி இந்தப் பதிவில் முன்னுக்குப் பின் முரணாக என்ன சொல்லியிருக்கிறேன் என்று கொஞ்சம் விளக்குங்கள்!

No comments:
Post a Comment