சாமிக்கு ஒரு சிக்கல்!....
ஒரு சுவையான பழைய அனுபவம்......
நண்பர்களே!
ஒரு குறிப்பிட்ட சாமி சக்தியுள்ளது, அதை வேண்டிக்கொண்டால் நல்லது நடக்கும், பூ கொடுத்துவிட்டால் நிச்சயம் மாறாது என்று சொன்னார்கள்....
எனக்கோ ஏராளமான கடன்!
எவ்வளவு விளைந்தாலும் என்ன விலைக்கு விற்றாலும் தேற முடியாது என்கிற நிலை!
ஆனால் மேலே சொன்னபடி சாமி பூ கொடுத்துவிட்டால் நிச்சயம் நடக்குமல்லவா?
சாமியைச் சரியாகச் சிக்கலில் மாட்டி விட்டேன்!
ஆதாவது வெள்ளை, சிவப்பு நிறங்களில் உள்ளே பூ வைத்து மடிக்கப்பட்ட பொட்டலங்கள் சிலவற்றை சாமி முன்னால் வைத்து நான் கெட்டது :
சாமி! வெள்ளைப்பூ கொடுத்தால் எனக்கு இருக்கும் கடன்கள் பூராவும் இந்த வெங்காய விளைச்சலில் தீர்ந்து போகணும்!
சிவப்புப் பூ கொடுத்தால் கடன்கள் அடைபட்டதுபோக கணிசமாக மிச்சம் ஆகணும்!......
இது எப்படி?.....
நான் கேட்டது தவறா?....
சொன்ன ஆசாமியும் ஒத்துக்கொள்ளவில்லை!
சாமியும் சிவப்புப் பூ கொடுத்தது. ஆனால் ஒப்பந்தப்படி கடன்களைத் தீர்த்துவைக்கவும் இல்லை! கணிசமான காசை மிச்சம் கொடுக்கவும் இல்லை!
தோட்டத்தை விற்றுவிட்டு வெளியேறினேன்......
(முப்பது வருடங்களுக்கு முன்னால் உண்மையில் நடந்தது)
No comments:
Post a Comment