கடவுள் நம்பிக்கை சரியா தவறா என்பதை நமக்கு வரும் இன்ப துன்பங்களைவைத்து முடிவு செய்தால் பெரும்பாலோர் நாத்திகர்களாகவே இருக்கவேண்டும்.
உண்மை அப்படி இல்லை!
பெரும்பாலோர் துன்ப நிலையிலும் ஆத்திகர்களாகவே உள்ளனர்.
இருக்கிறது என்றால் அது எந்த நிலையிலும் இருக்கவேண்டும்.
அதற்கு அறிவுபூவமான காரணங்கள் இருக்க வேண்டும்.
இல்லை என்றால் என்றால் அது எந்த நிலையிலும் இருக்கக் கூடாது!
அதற்கும் அறிவுபூர்வமான காரணங்கள் இருக்க வேண்டும்.
அதுதான் தெளிந்த அறிவு!
அதனால் தமக்கோ தாம் வாழும் சமூகத்துக்கோ அனைத்தையும் தாங்கி நிற்கும் இந்தப் பூமிக்கோ எந்தத் தீங்கும் இருக்க முடியாது!
கடவுள் நம்பிக்கையும் மறுப்பும் இருப்பு பற்றிய இருவேறு கண்ணோட்டங்களே!
அதில் படைப்பு என்பது ஒரு கண்ணோட்டம். அது ஆத்திகம்!
இயக்கம் என்பது ஒரு கண்ணோட்டம் . அது நாத்திகம்!
இரண்டும் வலியுறுத்துபவை உயர்ந்த வாழ்க்கைப் பண்புகளே!
மூட நம்பிக்கைகளைக் கலந்தால் இரண்டும் பயன் படாது!
சரியாகப் புரிந்துகொண்டால் முரண்பாடுகளுக்கோ மோதலுக்கோ இடமில்லை!
அவ்வளவே!
No comments:
Post a Comment